கர்ப்பமான பன்னி மாதிரி இருந்துட்டு Fitness போஸ்ட்டா - தன்னை கேலி செய்தவருக்கு பார்வதி கொடுத்த பதிலடி.

By Rajkumar · 9/12/2022

தற்போது இருக்கும் காலகட்டத்தில் டிவி தொகுப்பாளினிகளுக்கு இணையாக யூடுயூப் தொகுப்பாளர்களும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தவர் விஜவும் தொகுப்பாளினியுமான Vj பார்வதி. இவர் கலாட்டா என்ற தனியார் யூடியூப் சேனலில் ஜாக்கி ஆக பணிபுரிந்தார். இவர் விஜே மட்டுமில்லாமல் மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்துக்கும் மேலாக ஃபாலோவர்ஸ் உள்ளார்கள்.

பார்வதி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது என்னவோ ஹிப் ஹாப் ஆதி மூலம் தான். கடந்த ஆண்டு ஹிப் ஹாப் நேர்காணல் கொடுத்து இருந்தார். அந்த நிகழ்ச்சியை ஆர்.ஜே.பார்வதி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். இதில் ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்கள் தன்னுடைய பழைய நினைவுகள் விஷயங்களையும், நடந்திருக்கும் விஷயம் , எதிர்காலத்தில் நடக்கும் விஷயம் என பல விஷயங்களைப் பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டார்.

பார்வதியும் கேலிகளும் :

அப்போது பார்வதி அவர்கள் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஆண்ட்டி(aunty) பார்த்து சைட் அடித்து இருக்கிறீர்களா?? என்று கேட்டார். " உங்களைப் பார்ப்பதுக்கு முன்னாடி வரை யாரும் இல்லை" என்று சொன்னார். இதனால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோவை போட்டு பல மீம்ஸ்களை போட்டு வந்தனர். அப்போது முதல் இவரை பலரும் ஆன்டி என்று தான் அழைத்து வருகின்றனர்.

அதே போல இவரை பலரும் மியா கலீபாவுடன் ஒப்பிட்டு வருகின்றனர். இப்படி இவர் குறித்து பல விதமான கேலிகள் இருந்தாலும் அதை மிகவும் எளிதாக கடந்து சென்றுவிடுகிறார் பாரு. யூடுயூப் பேட்டிகள் மூலம் பிரபலமடைந்த பார்வதிக்கு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கூட வாய்ப்புகள் கிடைத்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று இருந்தார்.

பார்வதி பகிர்ந்த வீடியோ :

அதே போல சிவகுமாரின் சபதம் படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமாகி இருந்தார். மேலும், கடந்த ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபாரப்பான 'சர்வைவர்; நிகழ்ச்சியில் கூட போட்டியாளராக பங்கேற்று இருந்தார். இந்த நிகழ்ச்சியிலும் சர்ச்சைக்குரிய போட்டியாளராக திகழ்ந்தார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் உடற் பயிற்சி செய்து அதனை வீடியோவாக பதிவிட்டு இருந்தார்.

கேலி செய்தவருக்கு பார்வதியின் பதில் :

அதற்கு ரசிகர் ஒருவர் ''கொடுமடா டேய் சாமி, Fitஆ இருந்து Status போட்டா ஓகே. ஆனா இப்படி கர்ப்பமான பண்ணி மாதிரி இருந்துட்டு முடியல' என்று கேலி செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்த பாரு 'என் தொப்பை குறித்து இது போன்ற கேவலமான கமெண்டுகள் வரும் என்று எதிர்பார்த்தேன். பெண்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட உடல் அமைப்பை கொண்டிருக்க வேண்டும் என்று ஏன் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். இந்த அழகுக்கான அளவை யார் தீர்மானம் செய்கிறார்கள் ? இப்படி கமெண்ட் போட்டு இருக்கும் நபர் ஏதோ சூப்பர் fitஆக இருக்கிறாரா? நான் தொடர்ந்து என்னுடைய தொப்பையுடன் தான் பதிவுகளை போடுவேன். என்னுடைய உடலை நான் கட்டுக்கோப்பாக வைத்திருப்பது என்னுடைய இஷ்டம். தொப்பை வைத்திருப்பதும், தொப்பையுடன் புகைப்படத்தை பதிவிடுவதும் சாதாரணமான விஷயம் தான். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் பதிவிட முடியாது. இது என்னுடைய உடல், என்னுடைய அக்கவுண்ட் மற்றும் என்னுடைய விருப்பம்' என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full