இவனுங்களுக்கு வேற வேலையயே இல்ல - தன்னை மியா கலீபாவுடன் ஒப்பிடுவோருக்கு பார்வதி அளித்த பதிலடி - வீடியோ இதோ.

By Rajkumar · 18/8/2020

தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தவர் விஜே பார்வதி. இவர் கலாட்டா யூடியூப் சேனலில் ஜாக்கி ஆக பணிபுரிந்தார். இவர் விஜே மட்டுமில்லாமல் மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்துக்கும் மேலாக ஃபாலோவர்ஸ் உள்ளார்கள். இந்நிலையில் விஜே பார்வதி அவர்கள் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்து வந்தார்.

https://twitter.com/Mysteri13472103/status/1269883570211840000

அதில் ஒருவர் உங்களுடைய வயது என்ன என்று கேட்டார். அதற்கு அவர் நல்ல நியாயமான வயது தான் என்று கூறியிருந்தார். பின் இன்னொருவர் நீங்கள் சிங்கிளா? கமிட்டடா? என்று கேட்டார். அதற்கு விஜே பார்வதி அவர்கள் நான் சிங்கிள் தான். சீக்கிரம் கமிட் ஆக வெயிட் பண்ணிட்டு இருக்கேன் என்று கூறியிருந்தார். இதை தொடர்ந்து இன்னொருவர் உங்களுடைய வெளிப்புறத் தோற்றத்தைப் பார்த்தால் நீங்கள் பிரபல ஆபாச நடிகை மியா கலிபா மாதிரி உள்ளீர்கள் என்று கூறினார்.

அதற்கு விஜே பார்வதி அவர்கள் எந்த பக்கத்தில் பார்த்தாலும் நான் ஒன்னும் அப்படி தெரியவில்லையே. இந்த கண்ணாடி போட்டு இருக்கறதுக்காக நீங்க சொல்லுவீங்க. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று செம கூலாக பதில் அளித்து இருந்தார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பார்வதியிடம், இதே கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு பதில் அளித்த vj பார்வதி.

https://twitter.com/iam_vikram1686/status/1295299395307544576

இவனுகளுக்கு வேற வேலையே கிடையாது. எனக்கு கண்களில் பிரச்சனை இருக்கிறது நான் கண்ணாடியை கழட்டினாள் எனக்கு சரியாக பார்வை தெரியாது. நான் கண்ணாடி போட்டிருப்பதால் என்னை மியாகலிப்பா உடன் ஒப்பிடுகிறார்கள் என்று நினைக்கிறேன். மியாகலிஃபா செய்வதும் ஒரு தொழில் தான். பல வெளிநாடுகளில் பாலியல் தொழிலுக்கு என்று சில நபர்கள் இருக்கிறார்கள். அதுபோன்ற அதுவும் ஒரு தொழில் தான். ஆனால், இவர்கள் எல்லாம் அதை பார்த்துவிட்டு என்னை வேறுவிதமாக ஒப்பிட்டுக் கொள்கிறார்கள், மற்றபடி மியா கலிஃபா சிறந்தவர் தான் என்று கூறியுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full