யூடுயூப் வருமானம், சொகுசு கார் என்று பந்தாவான வாழ்க்கையை வாழ்ந்து வரும் மாத செலவு மட்டும் இவ்வளவா? வாயடைத்து போன பாலோவர்ஸ்.

By Arun · 14/2/2024

Vj பார்வதியின் மாத பட்ஜெட்டை கண்டு அவரின் பாலோவர்களே தலை சுற்றி இருக்கின்றனர். தற்போது இருக்கும் காலகட்டத்தில் டிவி தொகுப்பாளினிகளுக்கு இணையாக யூடுயூப் தொகுப்பாளர்களும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தவர் விஜவும் தொகுப்பாளினியுமான Vj பார்வதி. இவர் கலாட்டா என்ற தனியார் யூடியூப் சேனலில் ஜாக்கி ஆக பணிபுரிந்தார். இவர் விஜே மட்டுமில்லாமல் மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்துக்கும் மேலாக ஃபாலோவர்ஸ் உள்ளார்கள்.

பார்வதி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது என்னவோ ஹிப் ஹாப் ஆதி மூலம் தான். கடந்த ஆண்டு ஹிப் ஹாப் நேர்காணல் கொடுத்து இருந்தார். அந்த நிகழ்ச்சியை ஆர்.ஜே.பார்வதி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். இதில் ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்கள் தன்னுடைய பழைய நினைவுகள் விஷயங்களையும், நடந்திருக்கும் விஷயம் , எதிர்காலத்தில் நடக்கும் விஷயம் என பல விஷயங்களைப் பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டார்.

பார்வதியும் கேலிகளும் :

அப்போது பார்வதி அவர்கள் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஆண்ட்டி(aunty) பார்த்து சைட் அடித்து இருக்கிறீர்களா?? என்று கேட்டார். " உங்களைப் பார்ப்பதுக்கு முன்னாடி வரை யாரும் இல்லை" என்று சொன்னார். இதனால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோவை போட்டு பல மீம்ஸ்களை போட்டு வந்தனர். அப்போது முதல் இவரை பலரும் ஆன்டி என்று தான் அழைத்து வருகின்றனர்.

டுயூப் பேட்டிகள் மூலம் பிரபலமடைந்த பார்வதிக்கு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கூட வாய்ப்புகள் கிடைத்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று இருந்தார். அதே போல சிவகுமாரின் சபதம் படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமாகி இருந்தார். மேலும், கடந்த ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபாரப்பான 'சர்வைவர்' நிகழ்ச்சியில் கூட போட்டியாளராக பங்கேற்று இருந்தார்.

பார்வதியின் சொகுசு கார் :

சிவகுமாரின் சபதம் படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் கமிட் ஆகி இருக்கிறார் பார்வதி. அதே போல இவர் vibe with paaru என்ற யூடுயூப் பாகத்தை நடத்தி வருகிறார். இதில் அடிக்கடி வீடியோக்களை பதிவிட்டு வரும் பார்வதி சமீபத்தில் புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இவர் வாங்கி இருக்கும் காரின் பெயர் Jeep Compass என்ற காராகும் மேலும் இதன் ஆரம்ப ex show room விலையே 20 லட்சத்திற்கும் மேல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Vj பார்வதியின் மாத பட்ஜெட் :

இப்படி ஒரு நிலையில் Vj பார்வதி தனது மாத செலவுக்கு ஆகும் பட்ஜெட் குறித்து பதிவிட்டு இருந்தார். அதில் வாடகை - 23,000, கார் லோன் -25,000, LIC -15000, சமைப்பவருக்கு - 6000, பெட்ரோல் - 10000(குறைந்தபட்சம்), இதர மளிகை செலவுகள் - 5000, செல்லப் பிராணி - 5000, தனிப்பட்ட செலவு - 10,000 என்று மாத செலவு கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஆகிறது என்று பதிவிட்டு இருந்தார். இதனை கண்ட அவரின் பாலோவர் ஒருவர் உங்கள் rent தான் என் சம்பளமே என்று பதிவிட்டுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full