பெரிய ஜமீன் பரம்பரை, காருக்குள்ள இருந்து தான் கொடுப்பாரு - இர்பானை வெளுத்து வாங்கிய VJ பார்வதி
யூடியூபர் இர்ஃபானை விஜே பார்வதி சராமாறியாக வெளுத்திருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக இர்ஃபான் குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இர்பான் ரமலான் பண்டிகை முன்னிட்டு ஏழைகளுக்கு உணவு, உடை வழங்க காரிலேயே தன்னுடைய மனைவியுடன் சென்று இருந்தார். அப்போது ஒவ்வொரு பகுதியாக சென்று ஏழை மக்களை சந்தித்து உதவி பொருட்களை காருக்குள்ளே உட்கார்ந்து தந்திருக்கிறார் இர்பான்.
https://www.youtube.com/watch?v=DLNK4RpEgho
காருக்குள்ளேயே கையை நீட்டி மக்கள் ஆர்வக்கோளாறில் வாங்கி இருக்கிறார்கள். எதிர்பாராத விதமாக பொருள் வாங்கும் போது இர்பான் மனைவியின் கையை நகத்தால் இழுத்து விட்டிருக்கிறார்கள். இதனால் கோபம் அடைந்து இர்பான், இப்படி அசிங்கமாக பண்ணாதீங்க, ஏம்மா பிடிச்சு இழுக்காதீங்க, எல்லோருக்கும் கொடுக்க தான் வந்திருக்கோம். ஏன் இப்படி பிடிச்சு இழுக்கிறீங்க? என்று கோபமாக பேசி திட்டி இருக்கிறார். இதை இவர் வீடியோவாகவும் எடுத்து சேனலில் வெளியிட்டிருக்கிறார்.
இர்பான் செய்த வேலை:
இதைப் பார்த்து நெட்டிசன்கள் பலர், இர்பானை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் விஜே பார்வதி வீடியோ ஒன்று வெளியிட்டார். அதில் அவர், பெரிய ஜமீன் பரம்பரை. காருக்குள் உட்கார்ந்து கொண்டுதான் இல்லாத மக்களுக்கு சேவை பண்ணுவார். இவருடைய மனைவியை அவ்வளவு பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று நினைத்தால், சமூக நல செயல்களுக்கு அழைத்துக் கொண்டே வரக்கூடாது. காருக்குள்ளே வைத்துக் கொள்ளணும் இல்லையென்றால் வீட்டில் விட்டுட்டு வர வேண்டியதுதானே, ரத்தன் டட்டாவை பற்றி தயவுசெய்து படிங்க.
விஜே பார்வதி வீடியோ:
ரத்தன் டட்டா தன்னுடைய வாழ்க்கையில் சம்பாதித்த அதிக பணத்தையுமே இல்லாதவர்களுக்கு தான் கொடுத்துவிட்டு சென்றார். அவர் அப்படி கொடுத்ததை எங்குமே விளம்பரப்படுத்திக் கொண்டது கிடையாது. ஆனால், இந்த புது பணக்காரனுங்க இருக்காங்க பாத்தீங்களா, இவங்க பண்ற கூத்து இருக்கே, தன்னிடம் காசு இருக்கிறோம் என்பதை வந்து எப்படி எல்லாம் கேவலமாக செய்கிறார்கள். இந்த மாதிரி சீப் மெண்டலிட்டி உள்ளவர்களை பற்றி பெரிய லிஸ்ட்டே இருக்கு. இவனுங்களை நம்ப ப்ரொமோட் பண்றதா? நாடு நாசமா போக வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார்.
Shame on you Irfans View. pic.twitter.com/uD9r8WQVQl
— vjpaaru (@parvathy_saran) April 1, 2025
இர்பான் குறித்த தகவல்:
சினிமா நடிகர்களை விட ட்ரெண்டிங்கில் உள்ளவர்கள் யூடியூபர்கள் தான். யூடியூப் பிரபலம் உணவு விமர்சகர் இர்ஃபானை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவர் பல்வேறு ஹோட்டல்களுக்குச் சென்று உணவுகளின் டேஸ்ட் குறித்தும், தரத்தை குறித்தும் வீடியோவாக சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார். இதனாலே இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார் என்று கூட சொல்லலாம். மேலும், இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆசிபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் பார்த்து முடிவு செய்த இந்த திருமணம் மிகப் பிரம்மாண்டமாக நடந்தது.
இர்பான் குறித்த சர்ச்சை:
இதில் ஏராளமான யூடியூபர்கள், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தி இருந்தார்கள். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ‘குக் வித் கோமாளி சீசன் 5’ நிகழ்ச்சியில் இர்ஃபான் போட்டியாளராக கலந்துகொண்டு தன்னுடைய சமையல் திறமையை காண்பித்து இருந்தார். இதனிடையே இர்ஃபானின் மனைவி கர்ப்பமாக இருந்தார் என்று அறிவித்து இருந்தார். அதற்கு பின் இவர் கருவில் உள்ள சிசு ஆணா? பெண்ணா? என்பதை ஸ்கேன் செய்து தெரிந்து கொண்டது, தன் மனைவியின் பிரசவத்தில் குழந்தை தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் தான் வெட்டும் வீடியோவை வெளியிட்டது என பல சர்ச்சையில் சிக்கி இருந்தார்.