என்னது ரக்சனுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா? பிறந்தநாளில் முதன் முறையாக மகளை காட்டிய ரக்சன்.

By Rajkumar · 13/1/2024

முதன் முறையாக தனது மகளின் முகத்தை உலகிற்கு காட்டி இருக்கிறார் விஜய் டிவி தொகுப்பாளர் ரக்சன். விஜய் தொலைக்காட்சியில் பெண் தொகுப்பாளினிக்கு இணையாக ஆண் தொகுப்பளர்களும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் தற்போதைய விஜய் டிவி தொகுப்பாளராக ரக்ஷனும் ஒருவர். தொகுப்பாளரும் நடிகருமான ரக்ஷன் முதலில் ராஜ் டிவி, கலைஞர் டிவியில் தொகுப்பாளராக இருந்தார்.

ஆனால், அவருக்கென ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது விஜய் டிவி தான். விஜய் டிவியில் இவர் கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக உள்ளார்.விஜய் டிவி மூலம் தான் ரக்ஷன் மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், துல்கர் சல்மான் நடித்த 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' என்ற படத்தின் மூலமாக ரக்ஷன் வெள்ளித்திரையில் நடிகராக மாறி இருந்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு 13 ஆம் தேதி ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி காதலர் தின சிறப்பு எபிசோடாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களும் கோமாளிகளும் தங்களது வாழ்வில் நடந்த காதல் பற்றி கூறி வந்தனர். அப்போது ரக்ஷன் பேசிய போது பின்னர் கல்யாணம் லவ் மேரேஜ் தான் என்று கூறினார். ரக்ஷன் தனக்கு திருமணம் ஆகிவிட்டதாக சொன்னதை பார்த்து பலரும் காமெடிக்காக தான் என்று தான் பலரும் நினைத்தார்கள்.

View this post on Instagram

A post shared by Rakshan Vj (@rakshan_vj)

இதையடுத்து தனது மனைவியின் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் முதன் முறையாக பதிவிட்டு இருந்தார் ரக்ஷன். ரக்ஷன் விஜய் டிவியில் ஜாக்லினுடன் ஆங்கரிங் பண்ண போது பலரும் அவர்கள் இருவரும் காதலிக்கின்றனர் என்று கலாய்த்தனர். அப்போதும் தனக்கு திருமணம் ஆனதை ரக்ஷன் கூறியது இல்லை. அவ்வளவு ஏன் நடிகை சித்ராவுடன் ரக்ஷன் டேட்டிங் சென்றதாக கூட சித்ரா இறந்த போது சர்ச்சை கிளம்பியது அப்போது கூட தனக்கு திருமணமனமானதை சொல்லவில்லை ரக்ஷன்.

இப்படி பல சர்ச்சைகளை சந்தித்த போதும் ரக்ஷன் திருமணம் ஆனதை ஏன் இத்தனை ஆண்டுகள் மறைத்தார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரக்ஷன் 'என் மனைவிக்கு மீடியாவில் முகம் காட்ட விருப்பம் இல்லை. அதனால் தான் நான் எந்த நிகழ்ச்சியிலும் அழைத்து வருவது இல்லை என்று கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் தனது மகளின் புகைப்படங்களை முதன் முறையாக வெளியிட்டுள்ளார் ரக்சன்.

சமீபத்தில் தனது மகளின் பிறந்தநாளில் அவரின் புகைப்படங்கள் அடங்கிய வீடியோ ஒன்றை பதிவிட்டு தனது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து இருக்கிறார். ரக்சனுக்கு திருமணம் ஆனதையே நம்ப முடியாத பலர் இவருக்கு இவ்வளவு பேசிய மகள் இருக்கிறாரா என்று ஆச்சரியத்தில் கமன்ட் செய்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full