பிறந்தநாளன்று எனக்கு சரியான பாய் பிரன்ட் கிடைத்துவிட்டார்.! ரம்யா பதிவிட்ட புகைப்படம்.!

By Rajkumar · 30/7/2019

டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்றவர் தொகுப்பாளினி ரம்யா. மேலும், இவர் மக்கள் அறிந்த ஒரு பிரபல தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஒரு சில படங்களில் கூட தலை காண்பித்துள்ளார் ரம்யா.

ரம்யாவும் அப்ரஜீத் என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற சில மாதங்களுக்கு பின்பு தனிப்பட்ட பிரச்சனை காரணத்தால் தனது கணவரை பிரிந்து வந்து விட்டார்.

இதையும் பாருங்க : நாட்டாமை டாஸ்கின் போது இப்படி எல்லாம் நடந்தார் சேரன்.! மீரா அளித்த முதல் பேட்டி.! 

ரம்யாவிற்கு திருமணத்திற்கு பின்னர் தனது தொகுப்பாளினி பணியில் இருந்து சற்று ஓய்வெடுத்துக்கொண்டார் ரம்யா. பின்னர் விவாகரத்து பெற்றதும் மீண்டும் தனது பணிக்கு திரும்பினார் ரம்யா. சமீபத்தில் அமலா பால் நடிப்பில் வெளியான ஆடை படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரம்யா.

https://www.instagram.com/p/B0fz_Cfn2bC/

சமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் ரம்யா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவதும் வழக்கம். இந்த நிலையில் இன்று (ஜூலை 30) தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மேலும், ஜிம் ட்ரைலர் கொடுத்த பிறந்தநாள் பரிசு என எலும்புக் கூடுடன் உள்ள போட்டோவை பகிர்ந்துள்ளார். மேலும் எனக்கு பொருத்தமான பாய் பிரண்ட் எனவும் கேலியாக பதிவிட்டுள்ளார். ரம்யா.


Tamil Behind Talkies AMP · Quick view
View full