ராஜா வெற்றி பிரபு- தீபிகாவை தொடர்ந்து 'கனா காணும் காலங்கள்' மூலம் இணையும் மற்றொரு ஜோடி - யார் யார்னு தெரியுமா?

By krithika · 1/1/2025

சீரியல் நடிகர்கள் சங்கீதா சாய் மற்றும் அரவிந்த் சேஜு தங்கள் காதலை அறிவித்திருக்கும் செய்திதான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தொகுப்பாளினி, நடிகை, செய்தி வாசிப்பாளர் என பன்முகம் கொண்டவர்தான் சங்கீதா. மதுரையில் பிறந்த இவர், தனது கல்லூரி வாழ்க்கையையும் மதுரையிலேயே முடித்துவிட்டு, சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். சுமார் ஐந்து வருடங்களுக்கு மேல் ஐடி துறையில் பணியாற்றிய இவர், விஜேவாக ஆசைப்பட்டு ஆடிஷனில் கலந்து கொண்டார்.

ஆடிஷனில் அனைத்து சுற்றிலும் தேர்வாகி, சுமார் மூன்று மாதங்களுக்கு மேல் விஜேவாக பணியாற்றிக் கொண்டே ஐடி வேலையையும் சங்கீதா தொடர்ந்தாராம். பின், ஐடி வேலையை உதறி விட்டு முழு நேர விஜேவாக பணியாற்றினார். இவர் சன் மியூசிக் பிறந்தநாள் வாழ்த்துக்கள், 24 பிரேம்ஸ், லேடிஸ் சாய்ஸ், பிராங்கா சொல்லட்டா போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதற்குப் பிறகு இவருக்கு சீரியல் வாய்ப்பு கிடைக்கவே சின்னத்திரை பக்கம் வந்துவிட்டார்.

விஜே சங்கீதா குறித்து:

முதலில் இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான 'அழகு' சீரியலில் தான் பூர்ணா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த கதாபாத்திரம் முதலில் பாசிட்டிவாக காட்டப்பட்டாலும், பின்பு நெகட்டிவ் கதாபாத்திரமாக மாறியது. இந்த சீரியலில் நடிக்கும் போது, தனக்கு சிரமம் ஏற்படும் போதெல்லாம் அந்த சீரியலில் நடித்த நடிகை ரேவதி மற்றும் நடிகை ஸ்ருதி ராஜ் இவருக்கு ஊக்கம் அளித்ததாக சங்கீதா கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து, 'கனா காணும் காலங்கள் 1 ' வெப் சீரிஸில் மலர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

View this post on Instagram

A post shared by Sangeetha (@sangeethasai_offl)

கனா காணும் காலங்கள்:

பின், சில தனிப்பட்ட காரணங்களால் அவர் அந்த சீரியஸிலிருந்து விலகி இருந்தார். அதற்கு பிறகு இரண்டாவது சீசனில் இருந்து வேறு ஒருவர் மலர் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப்பின் சங்கீதா விஜய் டிவியில் ஒளிபரப்பான 'தமிழும் சரஸ்வதியும்' தொடரிலும் நடித்திருந்தார். அந்த சீரியலில் இவர் கதாபாத்திரத்திற்கு மக்கள் இடையே பல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், 30 வயது கடந்தும் திருமணம் செய்யாமல் இருந்த இவர் தற்போது தன்னுடைய திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

காதலை அறிவித்துள்ளார்:

அதாவது விஜே சங்கீதா, கனா காணும் காலங்கள் சீசன் 1, தொடரில் மலர் டீச்சர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சாய் பல்லவிக்கு பின்னர் இந்த மலர் டீச்சர் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும். இந்தத் தொடரில் ஸ்டுடென்ட் ஆக நடித்தவர்தான் அரவிந்த் சேஜு. தற்போது இவர்கள் இருவரும் தான் திருமணம் செய்ய இருப்பதாக வீடியோ மூலமாக அறிவித்திருக்கிறார்கள். தற்போது இவர்களின் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அரவிந்த் சேஜு குறித்து:

அரவிந்த் சேஜு, பிரபல பிளாக் ஷீப் யூடியூப் தொடர்களில் நடித்து பிரபலமானவர். இதன் மூலமாக தான் இவருக்கு 'கனா காணும் காலங்கள்' வெப் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதேபோல் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள 'அய்யனார் துணை' என்னும் சீரியலிலும் சோழன் என்கிற கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார். புத்தாண்டை முன்னிட்டு, சங்கீதா சாய் மற்றும் அரவிந்த சேஜு தங்களின் காதலை உறுதி செய்துள்ள நிலையில், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full