ஜீ5 ஓடிடியில் வெளியாகி இருக்கும் 'வாரண்ட்' வெப் தொடர் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
இயக்குனர் விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் வாரண்ட். இந்த படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இதில் பிரசாந்த் பாண்டியராஜ், காளி வெங்கட், பாலாஜி சக்திவேல், அருள் தாஸ் நம்ரிதா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த வெப் தொடருக்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்.
இந்த வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் ஹீரோ பிரசாந்த் பாண்டியராஜ் குடும்பத்திற்கு ஒரே ஒரு மகன். ஹீரோவை எப்படியாவது அரசு ஊழியர் ஆக்கிவிட வேண்டும் என்று அவருடைய தந்தை பல அரசு தேர்வுகளை எழுத வைக்கிறார். ஆனால், எதிலுமே ஹீரோ தேர்ச்சி பெறவில்லை. கடைசியில் காவல்துறையில் பணியாற்றும் உறவினர் மூலம் அவரை போலிஸ் ஆக்கி விடுகிறார். அரசு வேலையில் சேர வேண்டும் என்று காவல்துறையில் ஹீரோ பிரசாந்த் பாண்டியராஜ் சேர்கிறார்.
காவல்துறையில் நடக்கும் கட்டமைப்புகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஹீரோ ரொம்பவே திணறுகிறார். அதோடு நிறைய அவமானங்கள் கிண்டல் கேலிகளை எல்லாம் சந்திக்கிறார். அவரை சுற்றி நிறைய எதிர்மறை விஷயங்கள் தான் நடக்கிறது. அவமானத்தில் ஒரு கட்டத்தில் போலீஸ் வேலை வேண்டாம் என்று முடிவு எடுக்கும் நிலைக்கு பிரசாந்த் பாண்டியராஜ் வருகிறார்.
அதற்குப்பின் தன்னை அலட்சியப்படுத்தி அவமானப்படுத்தியவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று மீண்டும் வேலையில் சேர்கிறார். தன்னை யார் என்று நிரூபிக்க ஹீரோ மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்கிறார். இதனால் பெரிய பிரச்சனையில் ஹீரோ மாட்டிக் கொள்கிறார். அது என்ன? அதிலிருந்து அவர் மீண்டு வந்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் உடைய மீதி கதை.
படத்தில் ஹீரோ பிரசாந்த் பாண்டியராஜ் அப்பாவியான முகம் அமைதியான சுபாவம் என்று ஒரு வெகுளி தனமான இளைஞராக சுற்றிக் கொண்டிருக்கிறார்.
பின் தன்னுடைய நிலையை மாற்றுவதற்காக அவர் எடுக்கும் அதிரடி அவதாரம் சிறப்பாக இருக்கிறது. தன்னுடைய நடிப்பின் மூலம் பட்டைய கிளப்பி இருக்கிறார் என்று சொல்லலாம். சாதாரண மனிதராக
அனைத்தையும் கடந்த கடந்து போகக்கூடிய ஒருவர் தன்னை நிரூபிப்பதற்காக மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அட்ராசிட்டியாக இருக்கிறது. இவரை அடுத்து படத்தில் வரும் நடிகை நர்மிதா, அருள்ஜோதி சாயாதேவி கொடுத்த வேலையை சரியாக செய்து இருக்கிறார்கள்.
படத்தில் வரும் மற்ற நடிகர்களுமே தங்களுடைய அனுபவ நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள். கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடிகர்களை இயக்குனர் தேர்வு செய்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம். ஒளிப்பதிவு,பின்னணி இசை அனைத்துமே படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. குறிப்பாக பின்னணி இசை ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் பெரும் பலத்தை சேர்த்திருக்கிறது. காவலர்களின் பணி சுமை அவர்கள் துறை ரீதியாக எதிர்கொள்ளும் ஏமாற்றம், அவமானங்கள், நாளடைவில் அவர்களை எப்படி மாற்றியது என்பதை படத்தில் சொல்லியிருக்கிறார்.
அதே போல் திமிர் பிடித்த சில அதிகாரிகளால் அப்பாவி மக்கள் எப்படி எல்லாம் பாதிக்கிறார்கள் என்பதையும் அழுத்தமாக இயக்குனர் சொல்லி இருப்பது பாராட்டுக்குரிய விஷயம். மொத்தத்தில்
காவலர்களின் வலியையும் போராட்டத்தையும் இயக்குனர் சொல்லி இருக்கிறார். அனைவரும்
பார்க்கும் படமாக தான் வாரண்ட் இருக்கிறது.
நிறை:
நடிகர்கள் நடிப்பு
ஒளிப்பதிவு பின்னணி இசை படத்திற்கு பக்கபலம்
விறுவிறுப்பான கதைகளம்
சமூகத்திற்கு சொல்லப்படும் மெசேஜ்
இரண்டாம் பாதி அட்ராசிட்டி
குறை:
சில லாஜிக் குறைபாடுகள்
புதுமுக நடிகர்கள்
முதல் பாதி பொறுமையாக செல்கிறது
மற்றபடி படத்தில் பெரிதாக குறைகள் எதுவும் இல்லை
மொத்தத்தில் வாரண்ட் - அனைவரையும் சிறை பிடிப்பான்