'டைரக்டர் மிஷ்கின் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்' - கொந்தளித்து வீடியோ வெளியிட்டுள்ள வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்
இயக்குனர் மிஷ்கினை கண்டித்து சோசியல் மீடியா பிரபலம் திவாகர் வெளியிட்ட வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகிய வருகிறது. தமிழ் சினிமாவில் மிகவும் வித்யாசமான படங்களை கொடுப்பதில் கை தேர்ந்தவர் மிஸ்கின். இவர் திரைப்பட இயக்குநர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார். தற்போது மிஸ்கின் அவர்கள் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்து இருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் குறித்த ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
அது மட்டும் இல்லாமல் இவர் சமீபகாலமாக மேடைகளில் பேசுவது சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அந்த அளவுக்கு அவர் பேசுவார். அந்த வகையில் சமீபத்தில் நடந்த 'பாட்டல் ராதா' இசை வெளியீட்டு விழாவில் குடிகாரர்கள் பற்றியும், புதிதாக நடிப்பவர்கள் பற்றியும் இவர் பேசியது இணையத்தில் வைரலாகி இருந்தது. விழாவில் மிஷ்கின், நான் பக்கா குடிகாரன். நிறைய குடித்தவனும், குடிப்பவனும், குடிக்கப் போகிறவனும் நானே தான். இளையராஜா என்ற ஒருத்தன் இருக்கிறான். அவன் தான் எனக்கு மிகப்பெரிய போதை. அவர் தான் பலரையும் குடிகாரர் ஆக்கினார்.
மிஷ்கின் பேச்சு:
மேலும், இப்போது எல்லாருமே நடிக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் எல்லாம் யார் யாரோ நடிக்கிறார்கள். அவர்கள் செய்வதற்கு பெயர் நடிப்பு கிடையாது. ஆப்பு. அவர்களைக் குத்த வேண்டும் போல் இருக்கிறது என்று மிஷ்கின் சில ஆபாச வார்த்தைகளை உபயோகித்துப் பேசி இருந்தார். இவரது பேச்சுக்கு தற்போது பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் 'கஜினி' படத்தில் வரும் ஒரு சீனை நடித்து தன்னைத்தானே 'வாட்டரும் எல்லாம் ஸ்டார்' என்று கூறிக் கொள்ளும் சோசியல் மீடியா பிரபலம் திவாகர் மிஷினை கண்டித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
https://www.youtube.com/shorts/rfByhN2N_O4
திவாகர் கண்டனம்:
அதில், டைரக்டர் மிஷ்கின் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம். சார் நீங்கள் நிறைய சமூக சீர்திருத்த படங்களை எடுக்க வேண்டும். நீங்கள் தான் எங்களுக்கு அட்வைஸ் செய்ய வேண்டும். நாங்கள் உங்களுக்கு அட்வைஸ் செய்யவே கூடாது. மிஷகினுக்கு 50 வயதுக்கு மேலாகிவிட்டது. அவர்தான் எல்லோருக்கும் முன்னோடியாக திகழ வேண்டும். அதை விட்டுவிட்டு மற்றவர்கள் அவருக்கு அட்வைஸ் செய்யும் அளவுக்கு அவர் நடந்து கொள்ளக் கூடாது.
மிஷ்கின் மன்னிப்பு கேட்க வேண்டும்:
அந்தப் படத்தின் விழாவில் அவர் அப்படி அநாகரீகமாக பேசியிருக்கக் கூடாது. அவர் ஒரு சிறுவனை குறிப்பிட்டு நடித்துக் காண்பித்தார். அதைப் பார்த்து அங்கிருந்த கூட்டமும் சிரித்தது. அவர் பேசியதை சோசியல் மீடியாவில் பகிர்ந்த சிலர் என்னுடைய புகைப்படத்தையும் இணைத்து இருக்கிறார்கள். அந்த விழாவில் அவர் என்னைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர் அநாகரிகமாக பேசியதற்காக மக்கள் முன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். ஒரு இளைய தலைமுறையை இப்படி அவர் பேசியிருக்கக் கூடாது.
உங்களுக்கு நாகரீகம் இருக்கா:
நடிக்கத் தெரியாதவர்களை கூட நடிக்க வைப்பவர்கள் தான் இயக்குனர்கள். அப்படி நடிக்க தெரியாதவர்களின் மூக்கில் குத்துவேன் என்று அவர் கூறியிருக்கிறார். இதெல்லாம் ஒரு பேச்சா. நாகரீகம் என்று ஒன்று உங்களிடம் இருக்கிறதா. உங்கள் குடும்ப உறுப்பினர்களை யாராவது திட்டி இருந்தால் அவர்களை நீங்கள் திட்டுவதற்கு இது போன்ற கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தால் கூட அது பெரிதாக தெரியாது. நீங்கள் ஒரு இயக்குனர் என்பதால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் விலைக்கு வாங்கி விட்டதாக நினைக்க கூடாது. எங்கள் பின், என் பின்னால் இந்தியாவே, ஏன் உலகமே இருக்கிறது. அதை மிஷ்கின் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.