Jd பூனை பத்திரமா இருக்கு - அட ஜெயில் சீனுக்கு அப்புறம் அந்த பூனை இவர் கிட்ட தான் இருக்கு - இத நோட் பன்னீங்களா ?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.
https://twitter.com/urstrulyadhil/status/1351171919094157326
மாஸ்டர் படத்தில் விஜய்யின் JD கதாபாத்திரத்தை விட விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரம் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது. பலரும் மாஸ்டர் படம் விஜய் படம் இல்லை விஜய் சேதுபதி படம் என்று கிண்டலடித்து வருகின்றனர். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் பல வசனங்கள் கைதட்டலை பெற்றது. அதிலும் குறிப்பாக ostrich பறவை முட்டை போடுவதோடுன் ஒப்பிட்டு விஜய் சேதுபதி சொன்ன வசனம் பல மீமாக வந்துகொண்டு இருக்கிறது.
அதே போல இந்த படத்தில் எத்தனையோ நடிகர் நடிகைகள் நடித்திருந்தாலும் அவர்களுக்கு ஒரு அழுத்தமான கதாபாத்திரம் இல்லை. அதே போல இந்த படத்தில் நடிகர் விஜய்க்கேன்றே சில சின்ன சின்ன விஷயங்களை படத்தில் புகுத்தி இருந்தார் லோகேஷ். அந்த வகையில் படத்தில் விஜய் பயன்படுத்திய கார், கையில் காப்பு போன்றவற்றோடு இந்த படத்தில் ஒரு பூனையையும் விஜய் வளர்ப்பார்.இந்த படத்தில் அந்த பூனைக்கு கூட ஒரு முக்கிய பங்கு இருக்கிறதாம். அதாவது இந்த படத்தில் அந்த பூனை விஜய்யுடன் இருக்கும் வரை JD யாக இருக்கும் விஜய் எப்போதும் குடித்துக்கொண்டு எதை பற்றியும் கவலைப்படாமல் இருக்கும் ஒரு சோம்பேறியாக இருப்பார்.
ஆனால் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இரண்டு சிறுவர்கள் இறந்த பின்னர் அவர்களை பார்க்க JD அங்கே செல்லும் போது அந்த பூனை அவரிடம் இருந்து சென்றுவிடும் அதன் பின்னர் தான் படத்தில் ஒரு புதிய மனிதராக மாறுவார் JD. அந்த காட்சிக்கு பின்னர் அந்த பூனையை காண்பிக்க மாட்டார்கள். ஆனால், அந்த பூனை சஞ்சீவ் வீட்டில் இருக்கும். இதை சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.