லியோ படம் மட்டும் Flop ஆன, அடுத்த 3 மாசம் - படத்தின் மீது இருக்கும் அழுத்தம், லோகேஷ் கனகராஜ் கொடுத்த பதில்

By ·

லியோ படம் தோல்வி அடைந்தால் இதை தான் செய்வேன் என்று லோகேஷ் கனகராஜ் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் லியோ படம் குறித்த அப்டேட்டுகள் தான் வைரலாகி கொண்டு வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இருக்கிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள், போஸ்டர் பணிகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், அனைவரும் எதிர்பார்த்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக நடத்த வேண்டாம் என படக்குழு முடிவெடுத்திருந்ததாக கூறப்பட்டது.

லியோ படம்:

இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும், லியோ ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இன்னும் படம் ரிலீசாக சில தினங்கள் இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பும், ஆரவாரமும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் படத்திற்கான ப்ரீ புக்கிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை லியோ படத்திற்கு இந்தியா, வெளிநாடுகளிலும் முன் பதிவு டிக்கெட் கோடி கணக்கில் விற்று இருப்பதாக கூறப்படுகிறது.

அரசாங்க உத்தரவு:

மேலும், தமிழகம் முழுவதும் லியோ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டிருக்கிறது. அதோடு ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் திரையிட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அனைத்து திரையரங்களிலும் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை மட்டுமே காட்சிகள் திரையிடப்படும் என்று அறிவித்திருக்கிறது. இதை கண்காணிக்க தனிக்குழு ஒன்று அமைப்பதாக அரசாங்கம் கூறியிருந்தது. ஆனால், லியோ படத்திற்கு ஸ்பெசல் ஷோ அனுமதிக்கப்பட வேண்டும் என்று படக்குழு சார்பாக நீதிமன்றத்தில் கோரிக்கை மனு வைக்கப்பட்டு இருக்கிறது.

லோகேஷ் அளித்த பேட்டி:

இதனால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எழுந்து இருக்கிறது. இந்நிலையில் லியோ படம் தொடர்பாக லோகேஷ் கனகராஜ் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், ஒரு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பரிசுகளை வாங்குபவர்களை விடுங்கள். நான் அந்த போட்டியில் கலந்து கொண்டாலே போதும் என்று நினைப்பவன். அந்த அழுத்தம் கூட வேண்டாம் என்று தான் இருந்தேன். பாக்ஸ் ஆபிஸில் நம்பர் கேமில் நான் நுழையாமல் இருப்பதற்கு காரணம் இருக்கிறது.

லியோ தோல்வி குறித்து சொன்னது:

இங்கு பல பிரச்சனைகள் இருக்கிறது. யார் பெரியவன் என்ற எண்ணம் எல்லார் மத்தியிலும் இருக்கிறது. அதில் நான் என்னை வைத்து கொள்ள வேண்டாம் என்று தான் பார்க்கிறேன். நான் என்னுடைய தோல்வியை கண்டு ஏன் பயப்படனும். இதில் நிறைய பேர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். என்னுடைய தோல்வி அவர்களையும் பாதிக்கும். அதையெல்லாம் யோசிக்கும் போது தான் எனக்கு அழுத்தத்தை பற்றி நான் உணர்கிறேன். இந்த படத்தில் தோற்றுப் போனால் கூட அடுத்த மூன்று மாதத்தில் நான் வேலை செய்து நான் விட்ட இடத்தை பிடித்து விடுவேன் என்று கூறியிருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full