தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது.

படத்தில் கமலின் மகனாக காளிதாஸ் நடித்திருக்கிறார். போதை பொருள் கடத்தல் கும்பலால் கமலின் மகன் கொல்லப்படுகிறான். இதை அறிந்த கமல் தன் மகனைக் கொன்றவர்களைத் பழிவாங்க நினைக்கிறார். பின் அடுத்தடுத்து நடக்கும் சுவாரஸ்யமே படத்தின் கதை. மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள். படத்தின் திரைக்கதையில் உள்ள வேகமும், விறுவிறுப்பும் பார்வையாளர்களை பார்க்க தூண்டுகிறது.

Advertisement

ரசிகர்கள் கொண்டாடும் விக்ரம் :

ஒவ்வொரு காட்சியிலும் கமலும், லோகேஷ் கனகராஜூம் மெனக்கெட்டு மாஸ் காட்டி இருக்கிறார்கள். விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. அதோடு விக்ரம் படம் வெளிவந்து எல்லா இடங்களிலும் முதல் நாளே நல்ல வசூல் வேட்டை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. பிரபலங்கள் பலரும் விக்ரம் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.

சூர்யாவை பாராட்டிய கமல் :

மேலும், விக்ரம் படம் வெளியானதிலிருந்து அனைவர் மத்தியிலும் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்து அதிகமாக பேசப்பட்டு வருகிறது. படத்தின் கடைசி நிமிடத்தில் சூர்யா வந்திருந்தாலும் மிரட்டி சென்றிருக்கிறார். அதே போல சூர்யாவின் கதாபாத்திரம் பாரட்டப்பட்டாலும் இந்த படத்தில் நடிக்க சூர்யா எந்த ஒரு சம்பளமும் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.இது நாள் வரை படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து வாய் திறக்காமல் இருந்த சூர்யா தற்போது முதன்முறையாக விக்ரம் படம் குறித்து ட்வீட் ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, அன்புள்ள கமலஹாசன் அண்ணா.

Advertisement

Rolex கதாபாத்திரம் :

விக்ரம் படத்தில் உங்களுடன் நடித்ததன் மூலம் என் கனவு நிறைவேறி உள்ளது. இதை உருவாக்கி கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி என்று பதிவிட்டிருக்கிறார். இதற்கு கமலும் ‘சூர்யா தம்பி, இது உங்களுக்கு கொடுக்க வேண்டிய பல நாள் நிலுவை என்பது உங்களுக்கு தெரியும். ஏற்கனவே உங்களுக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் தற்போது அதிகப்படுத்துங்கள். உங்களுக்கு வாழ்த்துக்கள் தம்பி, சாரி தம்பி சார்’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement

Rolex க்கு பதில் ராயப்பன் :

இப்படி ஒரு நிலையில் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் விக்ரம் படத்தில் Rolex கதாபாத்திரத்தில் விஜய் நடித்து இருந்தால் எப்படி இருந்து இருக்கும் என்று கமன்ட் செய்து இருந்தார். இதை பார்த்த விஜய் ரசிகர்களே சிலர் ஒப்புக்கொள்ளாத நிலையில் பல ட்விட்டர் வாசிகளும் விஜய் நடித்து இருந்தால் கேவலமாக இருந்து இருக்கும் என்று கேலி செய்து இருக்கின்றனர். அது மட்டுமல்லாது பல மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

Advertisement