உலகம் முழுவதும் இன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் மிக கோலாகளமாக துவங்க இருக்கிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு கடும் நடவடிக்கைகளை எடுக்க உள்ளது காவல் துறை.

புத்தாண்டு கொண்டாட்டம் என்றாலே இரவு நேரங்களில் மது அறிந்திவிட்டு கண் மூடித்தனமாக வண்டி ஓட்டுபவர்கள் தான் அதிகம்.அதிலும் சென்னை போன்ற நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது அறிந்திவிட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஏராளம்.

Advertisement

இந்நிலையில் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டத்தை முன்னிட்டு சென்னையில் 15,000 போலீசார் குவிக்கபட்டுள்ளனர். மேலும், இன்று புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுபவர்கள் கடுமையாக தண்டிக்கபட உள்ளனர்.

இன்று இரவு 9 மணி முதல் சென்னையில் உள்ள மைலாப்பூர், ட்ரிப்ளிக்கேன், சென்ட் தாமஸ் மவுண்ட், கீழ் பாக்கம், மைலாப்பூர், தி நகர் உள்ளிட்ட 368 இடங்களில் 25 போலீஸ் குழு ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும், இன்று இரவு நீங்கள் குடித்து விட்டு காவல் துறையிடம் சிக்கினால் என்னென்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா.

Advertisement
  • உங்களின் ஓட்டுனர் உரிமம் பறிக்கப்படும்
  • உங்களின் பெயர் கிரிமினல் குற்றத்தில் பதியப்படும்
  • உங்களது வாகனமும் பறிமுதல் செய்யப்படும்
  • மேலும், நீங்கள் பாஸ்போர்ட் எடுக்கவும் சிக்கல் ஏற்படும்
Advertisement