வீடியோ காலில் பேசிய மஹத். வீட்டில் சிம்பு என்ன பண்ணிட்டு இருக்காருன்னு பாருங்க.

By Rajkumar · 12/4/2020

பிரபல நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்திரனின் மகன் 'யங் சூப்பர் ஸ்டார்' சிம்பு. டி.ராஜேந்தர் இயக்கிய பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சிம்பு, ஹீரோவாக அறிமுகமான படம் 'காதல் அழிவதில்லை'. டி.ராஜேந்தர் இயக்கிய இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சார்மி நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து "தம், கோவில், குத்து, மன்மதன், தொட்டி ஜெயா, சரவணா, வல்லவன், காளை, சிலம்பாட்டம், விண்ணைத்தாண்டி வருவாயா, வானம், ஒஸ்தி, போடா போடி, வாலு, இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், செக்கச்சிவந்த வானம்" என அடுத்தடுத்து பல படங்களில் சிம்பு நடித்தார்.

இதில் 'வல்லவன்' படத்தை சிம்புவே இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஹரி இயக்கிய 'கோவில்', கௌதம் மேனன் இயக்கிய 'விண்ணைத்தாண்டி வருவாயா' மற்றும் க்ரிஷ் இயக்கிய 'வானம்' ஆகிய மூன்று படங்களும் 'யங் சூப்பர் ஸ்டார்' சிம்புவின் நடிப்பிற்கு செம லைக்ஸ் வாங்கி தந்தது. இது போக "கோவா, கண்ணா லட்டு தின்ன ஆசையா, இங்க என்ன சொல்லுது, காக்கா முட்டை, காற்றின் மொழி, 90ml" போன்ற சில படங்களில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்.

இதையும் பாருங்க : குழந்தை பிறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலை யில் சிம்ரன் பாடலுக்கு ஆட்டம் போட்ட ஆல்யா.

கடைசியாக சிம்பு நடிப்பில் வெளியான படம் 'வந்தா ராஜாவா தான் வருவேன்'. பிரபல இயக்குநர் சுந்தர்.சி இயக்கிய இந்தப் படம், தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டான 'அத்தாரின்டிகி தாரேதி' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 'கொரோனா' எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், '144' போடப்பட்டுள்ளது. திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரபல நடிகரும், சிம்புவின் நண்பருமான மஹத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சிம்புவுடன் வீடியோ சேட் செய்தபோது எடுத்த ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்து "சிம்பு வீட்டில் சமைத்து கொண்டிருக்கிறார்" என்று பதிவிட்டிருக்கிறார். 'வந்தா ராஜாவா தான் வருவேன்' படத்துக்கு பிறகு 'மஹா' மற்றும் 'மாநாடு' என அடுத்தடுத்து இரண்டு படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் சிம்பு. இதில் 'மஹா' படத்தை ஜமீல் இயக்கி வருகிறார்.

இதையும் பாருங்க : ஷூட்டிங்கில் யோகி பாபு மீதும் கோபம் காட்டிய நடிகை. அப்படி என்ன செஞ்சார். நடிகை சொல்வதை கேளுங்க.

இந்த படத்தில் சிம்புவிற்கு கெஸ்ட் ரோலாம். இதில் ஹீரோயினாக ஹன்ஷிகா மோத்வானி நடித்து வருகிறார். பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகிக் கொண்டிருக்கும் 'மாநாடு' படத்தை வெங்கட் பிரபு இயக்கி கொண்டிருக்கிறார். இதில் ஹீரோயினாக பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி நடிக்கிறார். பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் இயக்குநர் எஸ் ஜே சூர்யா நடிக்கிறாராம்.

behindtalkies AMP · Quick view
View full