மகேஷ் பாபுவிற்கு வில்லனாக நடிக்க கேட்டுள்ள இயக்குனர் - விஜய் கூறிய பதில்.

By Rajkumar · 10/8/2020

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் மகேஷ்பாபு சமீபத்தில் ஸ்பைடர் என்ற படத்தின் மூலம் தமிழில் நேரடி கதாநாயகனாக களமிறங்கினார். 1979 ல் தெலுங்கு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மகேஷ் பாபு, தற்போது தெலுங்கு சினிமா துறையில் பிரின்ஸ் என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவரது படங்கள் என்றாலே சூப்பர் டூப்பர் ஹிட் தான்.

மகேஷ் பாபு நடித்த பல படங்களின் ரீமேக்கில் தான் விஜய் நடித்து இருந்தார். அந்த திரைப்படங்கள் விஜய்க்கு மாபெரும் திருப்புமுனை படமாக அமைந்து இருந்தது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கில்லி, போக்கிரி போன்ற படங்கள் இவர் நடித்த படங்களிலிருந்து ரீமேக் செய்யப்பட்ட படங்கள் தான். இதனால் மகேஷ் பாபுவின் மேனரிசத்தை விஜய் படங்களில் கூட நோட் செய்து இருக்கலாம்.

இந்த நிலையில் மகேஷ் பாபுவிற்கு வில்லனாக நடிக்க கேட்ட போது விஜய் சொன்ன பதில் என்னவென்ற வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலாக பரவி வருகிறது. மகேஷ் பாபு நடித்த ஸ்பைடர் திரைப்படம் தமிழில் நேரடியாக வெளியானது. இந்த படத்தை இயக்குனர் முருகதாஸ் தான் இயக்கி இருந்தார். முருகதாஸ், விஜய்யுடன் கத்தி, துப்பாக்கி, சர்க்கார் என்று மூன்று படங்களை எடுத்துள்ளார்.

https://twitter.com/sakxedge/status/1292411123967209473

இந்த நிலையில் ஸ்பைடர் படத்தின் போது பேட்டி ஒன்றில் பங்கேற்ற முருகதாஸ் பேசுகையில், விஜய் மற்றும் மகேஷ் பாபுவை வைத்து ஒரு படத்தை எடுப்பதாக இருந்தேன். அதில் தெலுங்கில் விஜய் வில்லனாகவும் தமிழில் மகேஷ் பாபு வில்லனாக நடிக்க திட்டமிட்டிருந்தேன். இதனை விஜய் சாரிடமும் சொன்னேன். அவரும் ஓகே சொல்லிட்டாரு. ஆனால், மகேஷ் பாபு பண்ணால் மட்டும் தான் இந்த படத்தில் நான் நடிப்பேன். வேறு யார் நடித்தாலும் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார் என்று சொல்லி உள்ளார் முருகதாஸ்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full