ரஜினியை அடுத்து 'மஹான்' படத்தை பார்த்துவிட்டு விஜய் என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

By subhashini · 12/2/2022

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ரம். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் இவர் தன்னுடைய கடுமையான உழைப்பினால் தமிழ் சினிமா உலகில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் வித்யாசமான கதைக்காக தன் உடலையும் வருத்தி எந்த நிலைக்கும் செல்பவர் விக்ரம். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் விக்ரம் அவர்கள் கோப்ரா, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது விக்ரம் மற்றும் துருவ் நடிப்பில் வெளியாகி உள்ள படம் மகான். இந்த படத்தில் அப்பா-மகன் இருவருமே கதாநாயகர்களாக நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இவர்களுடன் வாணிபோஜன், பாபி சிம்ஹா, சிம்ரன், தீபக் பரமேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

மகான் படம் பற்றிய தகவல்:

மேலும், இந்த படம் ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ளது. படத்தில் சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். மேலும், மூன்று மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் மகான் படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மதுவினால் ஏற்படும் பிரச்சினைகளையும் விளைவுகளையும் இயக்குனர் படத்தில் அழகாக காண்பித்திருக்கிறார்கள்.

மகான் படம் பற்றி ரஜினி சொன்னது:

நீண்ட இடைவெளிக்குப்பிறகு கார்த்திக் சுப்புராஜின் மகான் படம் ரசிக்க வைத்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் மகான் படக்குழுவினரை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த படத்தை குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறி இருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மகான் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்ஜை தொலைபேசி மூலம் அழைத்து தன்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்திருந்தார்.

மகான் படத்தை பார்த்து பாராட்டிய பிரபலங்கள்:

இதை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவு செய்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினியை அடுத்து தளபதி விஜய்யும் மகான் படத்தை பார்த்து தயாரிப்பாளர் லலித்க்கு போன் செய்து பாராட்டியிருக்கிறார். அதோடு தன்னுடைய வாழ்த்துக்களை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்க்கும் தெரிவித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டதாகவும் கூறி இருக்கிறார்கள்.

ரஜினியின் அடுத்த படம்:

இப்படி ரஜினி, விஜய் என தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் மகான் படத்தை பார்த்து பாராட்டி வருவது கார்த்திக் சுப்புராஜ் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் தற்போது ரஜினிகாந்த் அவர்கள் அண்ணாத்த படத்தை தொடர்ந்து தலைவர் 169 என்ற படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை நெல்சன் இயக்குகிறார். விஜய்யின் பீஸ்ட் படத்தையும் நெல்சன் இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full