பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் ஒட்டுமொத்த திரை உலகையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் உள்ளது. இவருடைய தற்கொலைக்கு காரணம் என்ன என்று தெரியாமல் மர்மங்கள் நிறைந்ததாக நீண்டு கொண்டே போகிறது. இருந்தாலும் நடிகர் சுஷாந்த் சிங் மன அழுத்தத்தினால் தான் தற்கொலை செய்து கொண்டார் என்று பல தரப்பில் பேசப்படுகிறது. இதனால் பல பாலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகள் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை மேற்கொள்ளபட்டு வருகிறது.

மேலும், சுஷாந்த் மரணத்தில் சில பாலிவுட் பிரபலங்களுக்கும் தொடர்பு இருகிறது என்று பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. மேலும், சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு சல்மான் உள்ளிட்ட சில நடிகர்கள் தான் காரணம் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சல்மான் கான் ஏ ஆர் ரஹ்மானை கலாய்த்த வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

Advertisement

ஏ ஆர் ரஹ்மானின் இசையை பற்றி நாம் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. ஆஸ்கார் விருது நாயகனான இவரின் இசைக்கு பலர் அடிமையாக இருக்கிறார்கள்.இந்த நிலையில் இந்த வீடியோவில் பேசும் சல்மான்கான், ஏ ஆர் ரகுமானின் இசை மிகவும் சுமாராகத்தான் இருக்கும் என்று கூறுகிறார். அதற்கு ரகுமான் வழக்கம்போல தனது சிறு புன்னகையுடன் பதில் அளிக்கிறார். அதன் பின்னர் சல்மான்கான் ஏ ஆர் ரஹ்மானுக்கு கை குலுக்கும் போது அதனை நிராகரிக்கும் விதமாக ஏ ஆர் ரகுமான் தனது பாக்கெட்டுக்குள் கையை விட்டு கொள்கிறார்.

பின்னர் வலுக்கட்டாயமாக சல்மான் கான் அவரது கையை பிடித்து குலுக்கினார். அதேபோல மற்றொரு வீடியோவில் ஏ ஆர் ரகுமான் இடம் சல்மான்கான் படத்திற்கு தாங்கள் எப்போது இசையமைப்பில் என்று கேள்வி கேட்கும் போது, எனக்கு பிடிக்கும்படி அவர் நல்ல படங்களில் நடிக்கும்போது அவருக்காக நான் இசையமைப்பேன் என்று பதிலளித்துள்ளார்.இந்த இரண்டு வீடியோவும் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது

Advertisement
Advertisement