'யுவன் என்ற பெயரை கேட்டாலே' யுவனை பாராட்டித் தள்ளிய ரஹ்மான் - வைரலாகும் வீடியோ

By Rajkumar · 8/5/2023

யுவன் சங்கர் ராஜாவை ஏ ஆர் ரஹ்மான் பாராட்டி தள்ளி பேசி இருக்கும் பழைய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக யுவன் ஷங்கர் ராஜா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் தமிழ் சினிமாவின் இசை ஜாம்பாவானான இளையராஜாவின் மகன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இளையராஜாவிற்கு பிறகு சினிமா உலகில் நிலையான இடத்தைப் பிடித்தவர் யுவன் சங்கர் ராஜா தான்.

இவர் தன்னுடைய 16 வயதிலேயே இசைத்துறையில் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். இவர் முதன் முதலில் இசையமைப்பாளராக அறிமுகமானது சிவா தயாரிப்பில் சரத்குமார் நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான ‘அரவிந்தன்’ திரைப்படத்தின் மூலம் தான். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இவர் இதுவரை 125 படங்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார்.

யுவன் இசை பயணம்:

அதுமட்டும் இல்லாமல் இவர் 2015 ஆம் ஆண்டிலே சொந்தமாக தயாரிப்பு ஸ்டுடியோவையும் நடத்தி வருகிறார். சினிமா துறையில் 25 ஆண்டுகளைக் கடந்து இளைஞர்கள் துறையில் தனக்கென ஒரு இடத்தை யுவன் பிடித்திருக்கிறார். தற்போது இவர் படங்களில் கமிட்டாகி பிஸியாக இருக்கின்றார். அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி இருந்த விருமன் படத்தில் யுவன் சங்கர் சங்கர் ராஜா தான் இசை அமைத்திருக்கிறார். கார்த்திக் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘விருமன்’.

View this post on Instagram

A post shared by YsR Ajith (@yuvan_additz)

யுவன் இசை அமைக்கும் படம்:

இந்த படம் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அதிதி சங்கர், சூரி, ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது யுவன் அவர்கள் விஷாலின் லத்தி, தனுஷின் நானே வருவேன், லவ் டுடே போன்ற பல படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

நிகழ்ச்சி ஒன்றில் ஏ ஆர் ரகுமான்:

மேலும், இவர் இளையராஜாவின் மகனாக சினிமா உலகில் அறிமுகம் ஆகி இருந்தாலும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த நிலையில் யுவனைக் குறித்து ஏ ஆர் ரகுமான் பேசி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சரோஜா படத்தின் நிகழ்ச்சி விழாவில் ஏ ஆர் ரகுமான் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர் யுவன் குறித்து கூறியிருந்தது, யுவன் என்ற பெயரை கேட்டாலே எனக்கு ஸ்மைல் வரும்.

யுவன் குறித்து சொன்னது:

23 வருஷத்துக்கு முன்னாடி இளையராஜா சார் கிட்ட நான் கீபோர்டு வாசித்து இருந்தேன். அப்போது அங்கே ஒரு குரல் கேட்டது. பார்த்தா யுவன் என்னை அங்கிள் என்று கூப்பிடுறாரு. இப்போது சிறப்பான இசையமைப்பாளராக வளர்ந்திருக்கிறார். ஒரு லெஜன்ட் குடும்பத்திலிருந்து வந்து தனக்கென ஒரு தனி வழியை உருவாக்கி இருக்கிறார் என்று பாராட்டி பேசி இருந்தார். தற்போது இந்த வீடியோவை தான் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full