அபூர்வ சகோதரர்கள் பாட்டை இந்த பாட்டில் இருந்து தான் எடுத்தேன் - காபி அடித்ததை ஒப்புக்கொண்ட இளையராஜா.

By Rajkumar · 28/7/2020

கடந்த சில மாதத்திற்கு முன்னர் ராயல்டி விவகாரத்தில் பிரபல பின்னணி பாடகரான எஸ் பிகும் இசைஞானி இளையராஜவிற்கும் பனிப்போர் ஏற்பட்டது. எஸ் பி தனது அனுமதியில்லாமல் தன்னுடைய பாடல்களை பாடி பணம் சம்பாதிக்கிறார் என்று இளையராஜா கடிந்திருந்தார்.மேலும், சமீபத்தில் வெளியான 96 திரைப்படத்தில் இடம்பெற்ற இளையராஜா பாடல்களால் கடுப்பான இளையராஜா அந்த படகுழவை திட்டி தீர்த்ததோடு படகுழுவினரை ஆண்மையில்லாதார்கள் என்றும் கடுமையாக சாடி இருந்தார்.

https://twitter.com/Gokulekrish/status/1287050135717834753

இந்த நிலையில் எம்ஜிஆர் பாடலில் இருந்து பாட்டை காப்பி அடித்ததாக இளையராஜா எஸ்பிபி இடம் கூறியுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பேசும் இளையராஜா அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் புது மாப்பிள்ளைக்கு என்ற பாடல் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான அன்பே வா படத்தில் இடம்பெற்ற நான் பார்த்ததிலே என்ற பாடலை வைத்துத்தான் போட்டேன் என்று கூறியிருக்கிறார்.

இளையராஜா குறித்து பல ரகசியங்களை கூறியுள்ளார் கங்கை அமரன்.இளையராஜாவின் சகோதரரும் இசையமைப்பாளருமான கங்கையமரன் இளையராஜாவின் பல படங்களில் பணியாற்றியுள்ளார். இளையராஜா ராயல்டி விவகாரத்தில் கூட கங்கையமரன் இளையராஜாவை கடுமையாக திட்டி தீர்த்திருந்தார். அப்போது பேட்டி பேட்டி ஒன்றில் பங்கேற்ற கங்கையமரன், ஒன்றாவது வயதில் இருந்து நானும் அவரும் ஒன்றாக இருக்கிறோம்.

https://twitter.com/sudhirsrinivasn/status/1287598548838576129

ஒரு படத்தின் இசையை கொடுத்திருக்கலாம் அதை கேட்கலாமா என்று கூறியுள்ளார். மேலும், இளையராஜா 150க்கும் மேற்பட்ட பாடல்களை எம் எஸ் விஸ்வநாதன் இசையமைப்பாளரிடம் இருந்து காப்பி அடித்ததாக கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இளையராஜாவே இதை ஒப்புக்கொள்வது போல பேசியுள்ளது தான் மிகவும் ஆச்சரியமான ஒன்று.

behindtalkies AMP · Quick view
View full