கலைஞ்ரிடம் வைரமுத்துவை போட்டுக் கொடுத்த அ.தி.மு.க. பிரபலம்-கலைஞர் கொடுத்த பதில் என்ன தெரியுமா?
தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதி இருக்கிறார். மேலும், இவர் இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றம் சாட்டி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதைத்தொடர்ந்து பல பெண்கள் கவிஞர் வைரமுத்து மீது செக்ஸ் புகார்களை அளித்து இருந்தார்கள். அதன் பிறகு வைரமுத்து குறித்து பல விமர்சனங்களை சின்மயி எழுப்பி இருந்தார். இருந்தாலும், பலர் வைரமுத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார்கள். ஆனால், இதை எல்லாம் வைரமுத்து கண்டு கொள்ளாமல் இருக்கிறார். இப்படி இருக்கும் மீண்டும் வைரமுத்து சர்ச்சையில் இருக்கிறார். அதாவது, சமீபத்தில் நடந்த படிக்காத பக்கங்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து, சமீப காலமாக இசை பெரிதா? பாடல் வரிகள் பெரிதா? என்ற பிரச்சனை தமிழ் சினிமாவில் இருந்திருக்கிறது.
வைரமுத்து சொன்ன சர்ச்சை கருத்து:
இசையும், பாடல் வரிகளும் சேர்ந்தால் தான் நல்ல பாடல் உருவாகும். ஆனால், சில நேரங்களில் இசையை விட மொழி சிறந்ததாக இருக்கிறது. இதை புரிந்து கொண்டவன் ஞானி, புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி என்று பேசி இருந்தார். இப்படி இவர் பேசி இருப்பது தான் சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. இதை பார்த்த பலருமே இவர் இசைஞானி இளையராஜாவை தான் மறைமுகமாக விமர்சித்து பேசி இருக்கிறார் என்று விவாதங்கள் எழுப்பி இருந்தார்கள்.
கலைஞருக்கும்,
— வைரமுத்து (@Vairamuthu) May 11, 2024
அ.இ.அ.தி.முகவிலிருந்து
தி.மு.கவில் வந்துசேர்ந்த
ஒரு முக்கியப் புள்ளிக்கும்
நடந்த உரையாடல்
எனக்கு
வாய்மொழியாக வந்தது;
தயக்கத்தோடு
கலைஞரையே கேட்டு
உறுதி செய்தது
சொற்கள் மாறியிருக்கலாம்;
சொன்னபொருள் இதுதான்
‘வைரமுத்த
ரொம்ப நம்பாதீங்க தலைவரே!’
‘ஏன்? எதனால?’
‘அவரு…
கங்கை அமரன் வீடியோ:
இது குறித்து கங்கை அமரன், எங்களால் மேலே வந்தவர், வந்த இடத்தையே காலில் போட்டு மிதிப்பது போல பேட்டி கொடுப்பதா? மனிதனுக்கு நன்றி வேண்டும். அவருடைய பாடலுக்கு அதிகமாக புகழ் வந்ததால் கர்வம் தலைக்கேறி விட்டது. அடக்கி வைக்க ஆள் இல்லாததால் துள்ளிக் கொண்டிருக்கிறார். வைரமுத்துவை வாழ வைத்தது இளையராஜா தான். இதனால் இளையராஜாவின் போட்டோவை வைத்து தினமும் வைரமுத்து வணங்க வேண்டும். இளையராஜா இல்லை என்றால் வைரமுத்துவின் பெயரை இருந்திருக்காது.
வைரமுத்து குறித்து சொன்னது:
நான் அவருக்கு சவால் விடுகிறேன். இளையராஜா இசையில் நீங்கள் எழுதிய பாடல்களை வேறு ஒரு இசையமைப்பாளரிடம் கொடுத்துப் பாருங்கள், அது முடியாது. இசையில்லாமல் பாடல்கள் கிடையாது. தன்னைத்தானே புகழ்ந்து கொண்டிருக்கிற கவிஞர்கள் இங்கே யார் இருக்கிறார்? அதை இவர் தான் செய்கிறார். நான் தான், நான் மட்டும் தான் என இருக்கிறார் வைரமுத்து. இளையராஜா குறித்து சின்ன குற்றமோ, குறைகளோ சொல்வதாக இருந்தால் அதற்குரிய விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று ஆவேசமாக பேசியிருந்தார். இதை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
வைரமுத்து பதிவு:
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வைரமுத்து அவர்கள் தனக்கும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கும் இடையில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர், கலைஞருக்கும், அ.இ.அ.தி.முக/விலிருந்து தி.மு.கவில் வந்து சேர்ந்த ஒரு முக்கியப் புள்ளிக்கும் நடந்த உரையாடல் எனக்கு வாய்மொழியாக வந்தது. தயக்கத்தோடு கலைஞரையே கேட்டு உறுதி செய்தது. சொற்கள் மாறியிருக்கலாம். சொன்னபொருள் இதுதான் ‘வைரமுத்த ரொம்ப நம்பாதீங்க தலைவரே!’ ‘ஏன்? எதனால?’ ‘அவரு உங்களப் புகழ்ந்து பேசுறாரே தவிர ஜெயலலிதாவ எப்பவும் திட்ட மாட்டேங்குறாரு’ (கலைஞர் சிறு சிந்தனைக்குப் பிறகு) ‘நீ அங்க இருந்து இங்க வந்திருக்க அங்க இருந்தபோது என்னத் திட்டுன; இங்க இருந்து அந்த அம்மாவத் திட்டுற வைரமுத்து எப்பவும் இடம் மாறல ஜெயலலிதா வைரமுத்துக்கு எதிரியும் இல்ல அவரு தமிழுக்காக நம்மகூட நிக்கிறாரு இன்னொண்ணு அவரு யாரையும் திட்டமாட்டாரு; அது அவரு இயல்பு’ கோள் சொன்னவர் குறுகிப்போனார் இப்படித்தான் கேடுகள் ஈட்டி எறியும்போதெல்லாம் கேடயமாவது சத்தியம் என்று கூறி இருக்கிறார்.