வைரலாகும் கமலுடனனா காதல் குறித்து ஸ்ரீவித்யா பேசிய பழைய வீடியோ - காபி வித் டிடியில் கமல் பேசிய வீடியோ இதோ.

By Rajkumar · 1/1/2024

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். கமலஹாசன் அவர்கள் சரிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவரை விட்டு பிரிந்து வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. நடிகை சரிகா டெல்லியை சேர்ந்தவர். சரிகா தன்னுடைய ஐந்து வயதிலேயே சினிமாவில் நடிக்கத் தொடங்கியவர். பின் 1967ம் ஆண்டு முதல் ஏகப்பட்ட இந்தி படங்களில் இவர் நடித்து இருக்கிறார். மேலும், Parzania எனும் ஆங்கிலப் படத்தில் சரிகா நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்றிருந்தார்.

கமலஹாசன் மற்றும் சரிகா தம்பதியினருக்கு பிறந்த மகள்கள் தான் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன். இதனை தொடர்ந்து கமல்-சரிகா இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2004 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். நடிகர் கமல் 1978 ஆம் ஆண்டு வாணி கணபதியை திருமணம் செய்துகொண்டார். ஆனால், ஒரே ஆண்டில் இவர்கள் பிரிந்துவிட்டனர். பின்னர் தான் சரிகாவை திருமணம் செய்த கமல் அவரையும் விவாகரத்து செய்துவிட்டு கௌதமியுடன் திருமணம் செய்துகொள்ளாமல் 13 ஆண்டுகள் வாழ்ந்து வந்தார்.

கமல் ஸ்ரீவித்யா காதல் :

பின்னர் அவரையும் பிரிந்தார் கமல். இப்படி ஒரு நிலையில் நடிகை ஸ்ரீவித்யா கமலுடனான காதல் குறித்து பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. நடிகை ஸ்ரீவித்யா கமலஹாசன் உடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார். அப்போது கமலஹாசன் மீது ஸ்ரீவித்யாவுக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. அதோடு கமலை பிடிக்காத நடிகைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவருக்கு பல நடிகைகள் ரசிகர்களாக இருந்தார்கள்.

View this post on Instagram

A post shared by Muhammed Aashiq (@iammuhammedaashiq_)

ஸ்ரீவித்யாவின் பழைய பேட்டி :

அதுபோலதான் கமலின் நடிப்பை பார்த்து ஸ்ரீவித்யாவும் அவர் மீது காதல் வைத்திருந்தார். ஆனால், இவர்கள் காதல் திருமணம் வரை செல்லவில்லை. ஸ்ரீவித்யாவை பிரிந்தவுடன் தான் கமல் வாணி கணபதியை திருமணம் செய்தார். ஆனால், கமலை பிரிந்த வலியில் இருந்து ஸ்ரீவித்யாவால் மீள முடியவில்லை. ஸ்ரீவித்யா, ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் ஜார்ஜுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

காதல் முறிந்த காரணம் :

பின்னர் ஸ்ரீவித்யாவிற்கு ஏற்பட்ட புற்று நோய் காரணமாக சினிமாவில் இருந்து விலகினார். பின்னர் சிறிது ஆண்டுகளில் இறந்துவிட்டார். இப்படி ஒரு நிலையில் ஸ்ரீவித்யா, கமல் குறித்து பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வந்தது. அதில் பேசிய அவர் ' நானும் அவரும் காதலிச்சது ஒட்டுமொத்த திரை துறைக்கும் எங்கள் இரண்டு குடும்பத்திற்கும் தெரியும். ஒரு நாள் என் அம்மா எங்கள் இருவரையும் அழைத்து. உங்கள் இருவருக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது.

https://twitter.com/annonymikkame/status/1741447618927235580?s=48

ஸ்ரீவித்யா குறித்து கமல் :

இதெல்லாம் வேண்டாம் என்று சொன்னார். இதனால் அவருக்கு மிகுந்த கோபம் வந்துடிச்சி. அதன் பின்னர் அவர் என்னிடம் பேசவே இல்லை. திடீர்ன்னு ஒரு நாள் அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டதாக நான் கேள்விப்பட்டவுடன் நான் அவரை இழந்துவிட்டேன் என்று அப்படியே உறைந்து போனேன்' என்றும் பேசி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் காபி வித் டிடி நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல், ஸ்ரீவித்யாவுடனான காதல் குறித்து பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full