சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து பலரும் அறிந்திடாத தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜியை யாராலும் மறக்க முடியாது. இவர் 1952ல் பராசக்தி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இருந்தார். அதனை தமிழ் இவர் பல படங்களில் நடித்து இருந்தார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட் கொடுத்த படங்களில் ஒன்று தான் வீரபாண்டிய கட்டபொம்மன்.

வீரபாண்டிய கட்டபொம்மனை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து போராடி வீர மரணம் அடைந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவருடைய வாழ்க்கை வரலாற்றை வைத்து திரைப்படமாக எடுக்க பல பேரும் முயற்சி செய்திருந்தார்கள். பின் செல்வம் பிச்சர்ஸ் என்ற நிறுவனம் கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாற்றை படத்தை எடுப்பதாக 1948 ஆம் ஆண்டு அறிவித்து இருந்தது.

Advertisement

முதலில் முதற்சித்த எஸ் எஸ் வாசன் :

அப்போது சினிமா உலகில் முன்னணி நடிகராக இருந்தவர் பி.யூ.சின்னப்பா. இவர் தான் கட்டபொம்மன் ஆக நடித்த ஒப்பந்தமானார். ஆனால், அந்த படம் எடுக்க முடியாமல் போனது. அதற்குப் பிறகு 1953 ஆம் ஆண்டு ஜெமினி ஸ்டுடியோஸ் எஸ் எஸ் வாசன் கட்டபொம்மன் என்ற பெயரில் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாற்று படத்தை எடுப்பதாக அறிவித்தார். அதற்கான கதை திரைக்கதை எல்லாம் எழுதி இருந்தார். இருந்தாலும், இந்த முயற்சியும் கை கோர்க்கவில்லை.

100 முறை அரங்கேற்றம் :

பிறகு ஒரு முறை சிவாஜி கணேசன் அவர்கள் கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாற்று நாடகத்தை எழுதும்படி கதாசிரியர் டி.கே கிருஷ்ணசாமியிடம் கேட்டுக் கொண்டிருந்தார். இதனால் கிருஷ்ணசாமியும் கட்டபொம்மன் நாடகத்தை எழுதி தந்திருந்தார். இந்த நாடகத்தை சிவாஜியின் நாடக மன்றம் தான் அரங்கேற்றி இருந்தது. சிவாஜி, எம் ஆர் சந்தனம் உட்பட பலர் இந்த நாடகத்தில் நடித்திருந்தார்கள். இந்த நாடகம் 100 முறைகளுக்கு மேல் அரங்கேற்கப்பட்டது.

Advertisement

5000 செலவு 35 லட்சம் லாபம் :

இந்த நாடகத்திற்காக சிவாஜி 5000 ரூபாய் செலவழித்து இருந்தார். மேலும், இந்த நாடகத்தின் மூலம் 35 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்திருந்தது. இதனால் தமிழக பள்ளிகளுக்கு பென்ச், சேர் போன்ற பல பொருட்களை சிவாஜி நன்கொடையாக வாங்கி அளித்திருந்தார். பின் இந்த நாடகத்தை பார்த்த பி ஆர் பந்தலு அவர்கள் தன்னுடைய பத்மினி பிக்சர்ஸ் சார்பில் படமாக எடுக்க முடிவு செய்திருந்தார். எஸ் எஸ் வாசனும் கட்டபொம்மன் கதையை படமாக்க முயற்சி செய்தது தெரியவந்தது.

Advertisement

175 நாட்கள் ஒட்டிய படம் :

பின் எஸ் எஸ் வாசன் சந்திரலேகா படத்தில் சிவாஜிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதனால் கட்டபொம்மன் படத்துக்கு வாசன் அவரை அணுகிய போது மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. பின் 1957ஆம் ஆண்டில் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கான வேலைகள் எல்லாம் தொடங்கி இந்த படம் 1958 ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி தமிழ்நாட்டின் உள்ள அனைத்து திரையரங்களிலும் வெளிவந்தது. இந்த படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கடலலை போன்று திரண்டது. தமிழ்நாடு மட்டும் இல்லாமல் பிற மாநிலங்களிலும் இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்திருந்தது.

வெளிநாட்டில் படம் செய்த சாதனைகள் :

இந்த படம் 175 நாட்களை கடந்து வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. இந்த படத்திற்காக சர்வதேச விருது உட்பட பல விருதுகள் கிடைத்தது. மேலும், இந்த படத்தை டிஜிட்டலில் மேம்படுத்தி 2015 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தார்கள். இந்த நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் இந்த ஆண்டோடு 65 வருடத்தை நிறைவு செய்து இருக்கிறது.ஆனால், இந்த படம் வெளிநாட்டில் பல சாதனைகளை படைத்தது. முதன் முதலில் வெளிநாட்டு விருதை வென்ற படம், முதன் முதலில் வெளிநாட்டு விருதை வென்ற இசையமைப்பாளர் ஜி. ராமனாதன்,முதன் முதலில் வெளிநாட்டில் சிறந்த நடனத்திற்கான விருதை வென்ற படம் போன்ற பல சாதனைகளும் அடங்கும்.

Advertisement