சினிமாவை பொறுத்த வரை எத்தனையோ படங்கள் ஆரம்பிக்கப்பட்ட கைவிடபட்டுள்ளது. அதே போல ஒரு சில படங்கள் பாதி எடுக்கப்பட்டு பின்னர் கைவிடபட்டுள்ளது. அந்த வகையில் இந்த படமும் கைவிடபட்ட தான். தமிழ் சினிமாவில் ராஜ்கிரண் மூலம் அறிமுகமானவர் நடிகர் வடிவேலு. அதன் பின்னர் பல்வேறு படங்களில் காமெடியில் கலக்கினார் வடிவேலு. கௌண்டமணி, செந்திலுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கியவர். தொடர்ந்து காமெடி கதாபத்திரத்தில் நடித்து வந்த இவர் பின்னர் கதாநாயகனாகவும் நடிக்கத் துவங்கினார்.

இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார். அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். பத்தாண்டுகளுக்கு முன் தேர்தல் பிரசாரத்தில் திமுகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்திருந்த வடிவேலு, அதன்பிறகான நிகழ்வுகளால் மனம் நொந்து போனார்.இவர் திமுகவுக்காக பிரசாரம் செய்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று விட்ட நிலையில், தொடர்ந்து வடிவேலுவை படங்களுக்குக் கமிட் செய்வதில் தயாரிப்பாளர்கள், மற்றும் இயக்குநர்கள் தயங்கியதாலேயே நடிப்பிலிருந்து ஒதுங்க வேண்டிய நிலை வந்தது.

Advertisement

இப்படி ஒரு நிலையில் நடிகர் வடிவேலு. இளையராஜாவிடம் மோதிரத்தை பரிசாக பெற்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு பின்னால் ஒரு சுவாரசியமான கதை இருக்கிறது. “இளையராஜாவின் மோதிரம்” என்ற படத்தின் துவக்கவிழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது. கவிஞர் வாலியின் கதை, திரைக்கதை, வசனம், எஸ்பி.முத்துராமன் இயக்கத்தில் துவக்கப்பட்ட படம்.அன்றைய நிகழ்வுகளை வைத்து அரசியல் நையாண்டியாக எழுதப்பட்ட கதை, இளையராஜாவும் வடிவேலுவும் இணைந்து நடிக்கவிருந்த படம்.

வாலி – இளையராஜா

ஒரு கட்டத்தில் இளையராஜா நடிக்க தயங்கியதால். படம் மேலும் வளரவில்லை.இந்த தகவலை கேள்விப்பட்ட ரஜினிகாந்த், இளையராஜா நடிக்கவிருந்த வேடத்தில் நான் நடிக்கிறேன், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கட்டும் என்று வாலியை அனுகியுள்ளார். எஸ்பி.முத்துராமன் இயக்கினால் மட்டுமே இந்த கதையை கொடுப்பேன் என்று வாலி மறுத்துவிட்டாராம். பின்னர் இந்த படம் அப்படியே கைவிடப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement