நடிகர் தனுஷ் அவர்களின் அடுத்த திரைப்படம். இயக்குனர் கொடுத்த சுவாரசிய தகவல்!

By Siva · 5/7/2022

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் இறுதியாக தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதற்கு பின் தனுஷ் அவர்கள் நானே வருவேன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். கலைப்புலி எஸ் தாணு அவர்களின் 'வி' கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறது. செல்வராகவன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் பாருங்க : வெளிநாட்ல இருந்து CCTV வீடியோ எப்படி கிடைக்குது, கடைக்காரன் கிட்ட பேசிடுவாங்களோ - கேலிக்கு உள்ளான அஜித்தின் வீடியோ.

தனுஷ் நடிக்கும் படங்கள்:

இதை தொடர்ந்து தனுஷ் அவர்கள் வாத்தி, sir போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதேபோல் தனுஷ் நடித்த ஹாலிவுட் படம் தி கிரேட் மேன். இந்த படம் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் பின்னர் ஜூலை 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியிடப்படுகிறது. இந்த படத்தில் தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இதனை அடுத்து தனுஷ் அவர்கள் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

திருச்சிற்றம்பலம் படம்:

இந்த படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ்- இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த படத்தில் படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தின் முதல் சிங்கிளான தாய்க்கிழவி பாடல் சமீபத்தில் தான் வெளியாகியிருந்தது. அதனை தொடர்நது இயக்குனர் மாதேஸ்வரன் -தனுஷ் கூட்டணியில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படம் உருவாக இருக்கிறது.

மாதேஸ்வரன்-தனுஷ் கூட்டணி:

இந்த படத்தில் நடிகை கீர்த்தி செட்டியை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதாவது, இந்த படம் 1930 காலத்தில் இருந்த மதராஸ் மாகாணத்தை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இதுகுறித்து இயக்குனர் அருள் மாதேஸ்வரன் கூறி இருந்தது, இந்த படம் ஹீரோவை மையமாகக் கொண்ட கதை. இந்த கதையை எழுதத் தொடங்கியபோது யாரையும் மனதில் வைத்து எழுத வில்லை. ஆனால், பாதி எழுதி முடித்த பிறகு தனுஷ் இந்த கதாப்பாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று நம்பினேன்.

அருள் மாதேஸ்வரன் அளித்த பேட்டி:

கதாநாயகனின் கேரக்டர் வெவ்வேறு காலகட்டங்களை கொண்டது ஆகவே இந்த படத்திற்கு தனுஷ் சரியான தேர்வாக இருப்பார். இந்த படத்தை கேஜிஎஃப் போல ஒரு பான் இந்திய படமாக தயாரிக்க இருக்கிறோம். கேப்டன் மில்லர் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் வல்லிபுரம் வசந்தன். 1987ம் ஆண்டு தற்கொலைப்படை தாக்குதலில் மரணமடைந்தார். படத்தின் இரண்டாவது பாகத்தில் போர் காட்சிகள் இடம்பெறும் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full