விசு முதல் எஸ் பி பி வரை பல்வேறு படங்களில் நடித்துள்ள பிக் பாஸ் போட்டியாளர் - இவர் யார் தெரியுமா ?

By Rajkumar · 5/10/2020

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் சற்று முன்னர் கோலாகலமாக துவங்கியது இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். தற்போது வரை ரியோ, ரேகா, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், ஜித்தன் ரமேஷ்,ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், வேல்முருகன் என்று பலர் என்ட்ரி கொடுத்து விட்டனர். இவர்கள் அனைவருமே ரசிகர்களுக்கு பரிட்சயமிமான ஆட்கள் தான்.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாத ஆட்கள் கலந்து கொள்வது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் இந்த சீசனில் பாலாஜி முருகதாஸ், சோம் சேகர், சம்யுக்தா கார்த்திக் என்று ஒரு சில புது முகங்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 14 வது போட்டியாளராக கலந்து கொண்டவர் சுரேஷ் சக்கரவர்த்தி.

இவரை ஒரு சிலருக்கும் தெரிந்து இருக்கும் ஒரு சிலருக்கு தெரிந்து இருக்காது. இவரும் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் தான். இவர் விசு, எஸ் பி பி என்று பல்வேறு ஜாம்பவான்களுடன் நடித்துள்ளார். மேலும், இவர் தனது 19 வயதிலேயே ராமா நாயுடுவின் தயாரிப்பில் வெங்கடேஷ் நடிக்க, சுரேஷ் கிருஷ்ணா இயக்க பிரேமா (தமிழில் அன்புச் சின்னம்) என்ற தெலுங்குத் திரைப்படத்தில் புது நகைச்சுவை நடிகரா அறிமுகமானார். அந்த படத்தில் எஸ் பி பியும் நடித்திருந்தார்.

அதன் பின்னர் தமிழில் ஜி.வியின் தயாரிப்பில், கே.சுபாஷ் இயக்கத்தில் "வாக்குமூலம்" என்றபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் அழகன் படத்தில் வரும் அதிராம்பட்டி சொக்கு கதாபத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் இவர் சொர்ணரேகை என்ற பாலச்சந்தரின் தொடரிலும் நடித்தார். அந்த தொடரை இயக்கியவர் எம் எஸ் பாஸ்கர் என்பது கூடுதல் சிறப்பு.

சீனியர் நடிகர்கள் லிஸ்டில் பன்னீர் புஷ்பங்கள் படத்தில் அறிமுகமான நடிகர் சுரேஷ் இடம்பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியானது. வெள்ளை ரோஜா, புது வசந்தம், தாலி புதுசு, அவள், இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்து வந்த சுரேஷ் சன் டிவி, ஜெயா டிவி என்று பல சீரியல்களில் நடித்துள்ளார். கலை வாழ்வுக்கு சிறு ஓய்வு கொடுத்து விட்டு அவுஸ்திரேலியாவின் மெல்பனில் வாழ்ந்து வந்த சுரேஷ் சக்ரவர்த்தி Madras Banyan Tree என்று சொந்தமாக உணவகம் கூட வைத்து இருக்கிறார். மேலும், சொந்தமாக சமயல் யூடுயூப் சேனல் ஒன்றை கூட நடத்தி வருகிறார் சூரேஷ்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full