பிக் பாஸ் நிகழ்ச்சியில் எத்தனையோ பிரபலங்கள் கலந்துகொண்டனர் அனால் அனைத்து பிரபலங்களும் ஒரு குரலுக்கு கட்டுப்பட்டனர் என்றால் அது பிக் பாசின் குரலுக்கு மட்டும் தான். அந்த கம்பீர குரலுக்கு சொந்தக்காரர் டப்பிங் ஆர்டிஸ்டான கோபி நாயர் தான் என்றொரு செய்து சில நாட்களுக்கு முன்பு வந்து பிறகு அதற்கு அவர் மறுப்பும் தெரிவித்தார்.

 

Advertisement

இந்த நிலையில் பிக் பாஸ் குரலுக்கு உண்மையான சொந்தக்காரர் பிரபல நடிகரும், தொகுப்பாளருமான ரிஷி தான் என்று தகவல்கள் வெளி வர ஆரமித்துள்ளன.

Advertisement

இவர் சன் தொலைக்காட்சியில் “டீலா நோ டீலா” என்ற நிகழ்ச்சியை தொங்காதுவழங்கியவர். அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளரான எண்டோமால் நிறுவனம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தயாரித்தது என்பது குறிப்பிட தக்கது.

Advertisement

“டீலா நோ டீலா” நிகழ்ச்சியை ரிஷி தொகுத்து வழங்கிய விதம் எண்டோமால் நிறுவனத்திற்கு பிடித்துப்போக அவரையே பிக் பாசின் குரலுக்கு சொந்தக்காரராக மாற்றியது அந்நிறுவனம் என்று செய்திகள் வெளிவர ஆரமித்துள்ள.

ரிஷியின் குரலை தொழில்நுட்பம் கொண்டு சில மாறுதல்களை செய்தனர் என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement