சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டார் ஆக கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார். அவரின் ரசிகர்கள் எல்லோரும் அவரை செல்லமாக ” தல” என்றுதான் அழைப்பார்கள். மேலும், திரையுலகினர் அவரை “அல்டிமேட் ஸ்டார்” என்றும் அழைப்பார்கள். இந்நிலையில் அஜித்குமாருக்கு என்றே ஒரு தனி ரசிகர் படையே உள்ளது என்று சொன்னால் மிகையாகாது. ரசிகர் மன்றங்கள் தான் கிடையாது. இது குறித்து சமூக வலைத்தளங்களில் பல கேள்விகளும் ,விவாதங்களும் நடந்து வந்தன. நம்ம தல அஜித் எப்போதுமே சினிமாவில் மட்டும் இல்லைங்க நிஜ வாழ்க்கையிலும் தைரியமான சாகசங்கள் செய்வதில் திறமை படைத்தவர். நடிகர் அஜித்துக்கு சிறு வயதில் இருந்தே பைக் ரேஸ் ,கார் ரேஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவர் மேலும், தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் கூட அதில் ஈடுபட்டு விளையாடி வெற்றியும் பெற்றுள்ளார். அதுமட்டும் இல்லைங்க ஒரு முறை முதலமைச்சர் முன்பு கூட தைரியமாக பேசி தன் பக்கம் உள்ள நியாயங்களை எடுத்து வைத்தவர்.

அஜித்குமார் செய்த நல்ல விஷயங்களை பற்றி சொல்ல வேண்டுமென்றால் ஒரு புத்தகமே போடலாம். அந்த அளவிற்கு அவர் தன் ரசிகர்களுக்காக பல விஷயங்களை செய்துள்ளார். என்ன? ஒன்னு மட்டும் தான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. அது அஜித் அவர்கள் ரசிகர் மன்றம் வைக்க வேண்டாம் என்று கூறியது. இது குறித்து கூட இயக்குனர் சரண் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அது என்னவென்றால், நான் ரசிகர் மன்றம் பற்றி அஜித்திடம் வைக்கலாம் என்று கேட்டேன். அதற்கு அஜித் கூறியது, இந்த ரசிகர் மன்றங்கள் மூலமாக தான் ரசிகர்களுக்குள்ளேயே யார் பெரியவர்? யார் சின்னவர்? என்ற பிரச்சினைகளும், கலவரங்களும் ஏற்படுகிறது. இதனால் பல பேர் சண்டை போட்டு , அடிபட்டு மருத்துவமனைக்கு செல்லும் நிலையில் கூட இருந்திருக்கிறார்கள். இந்த மாதிரி பிரச்சனைகள் நான் நிறைய பார்த்து விட்டேன். இந்த மாதிரி பிரச்சினைகள் நடக்காமல் இருக்க தான் நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். மேலும், என்னுடைய ரசிகர்கள் எல்லாருமே ஒன்றாக இருக்கவேண்டும்.

Advertisement

அது மட்டுமில்லை எல்லா இரசிகர்களும் இவர் சிறந்தவர், அவர் பெரியவர் என்ற போட்டி போடாமல் ஒற்றுமையுடன் அவரவர்களுடைய ரசிகர்களை கொண்டாடி வந்தால் போதும். அப்படி இருக்கும்போது இந்த மன்றங்கள் எல்லாம் தேவை இல்லை. இந்த ரசிகர் மன்றங்களால் சண்டை வருது என்று தான் எனக்கு ரசிகர் மன்றம் வைக்க வேண்டாம் என்று நினைத்தேன் என்று தல கூறினார். அப்போது நானும் தல கூறிய வார்த்தையை கேட்டு வியந்து போனேன். ரசிகர்கள் தன் மீது அன்பு வைத்தால் போதும் என்று நினைக்கிற காலத்தில் ரசிகர்களுக்கு எதுவும் நடக்கக்கூடாது என்ற அக்கறையோடு நினைக்கும் ஒரு உன்னதமான மனிதர் நம்ம அஜித் குமார் இன்று இயக்குனர் சரண் கூறினார். அது மட்டும் இல்லைங்க அஜித்குமார் அவர்கள் நிறைய டிரஸ்ட் வைத்துள்ளார்.அதோடு ஏழை எளிய மக்களுக்கு கல்வியையும், மருத்துவச் செலவையும் செய்து வருகிறார்.

அப்பப்ப இயற்கை சீற்றங்களினால் ஏற்படுபவர்கள் கூட பண உதவி செய்துள்ளார். தன்னால் முடிந்தவரை மக்களுக்காகவும் ரசிகர்களாகவும் செய்து வரும் ஒரு உன்னதமான மனிதர் அஜித்குமார். சமீபத்தில்கூட ஜெய்சங்கர் மகன் விஜய் சங்கர் அவர்களிடம் கண் அறுவை சிகிச்சைக்காக பணம் இல்லாமல் வருபவர்களுக்கு முடியாது என்று திருப்பி அனுப்பாமல் நீங்களே செய்யுங்கள். நான் அவர்களுக்கான பணத்தை தருகிறேன்என்றும்,இதை யாரிடமும் சொல்லாதீர்கள் என்று பெருந்தன்மையுடன் கூறினார். இந்த மாதிரி நல்ல குணங்கள் இந்த கலியுகத்தில் பார்ப்பதே அரிதான ஒன்று. தல எப்பவுமே படத்தில் மட்டும் ஹீரோ இல்ல, ரியல் வாழ்க்கையிலும் ஹீரோ தான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement
Advertisement