மகளுக்கு இந்தியா என்று பெயர் வைத்த அவெஞ்சர்ஸ் நடிகர்.! காரணம் இது தானாம்.!

By Rajkumar · 18/6/2019

ஹாலிவுட் படங்களில் பல படங்கள் 1 2 3 என பல பாகங்கள் வந்திருக்கிறது. அந்த வரிசையில் அவெங்ஜர்ஸ் சீரிஸ் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், அந்த படத்தின் மற்றும் ஒரு பாகம் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் என்ற படம் கடந்த மாதம் வெளியாகி இருந்தது.

முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 45 கோடிகளை வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் 169 பில்லியன் அதாவது இந்திய ரூபாயின் மதிப்புபடி 1,186 கோடிகளை வசூல் செய்துள்ளது. இதுவரை வந்த அவெஞ்சர்ஸ் சீரியஸ் படங்களிலேயே இந்த படம் தான் அதிக வசூலை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அவெஞ்சர்ஸ் சீரியஸ் படங்களில் ஐயன் மேன், கேப்டன் மார்வெல் போன்ற கதாபாத்திரத்திற்கு இணையாக தோர் கதாபாத்திரத்தில் நடித்த கிரிஸ் ஹெம்ஸ்ஒர்த் என்ற நடிக்கருக்கும் மிகபெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சமீபத்தில் இவரது மகளுக்கு இந்தியா என்று பெயர் வைத்து இந்தியர்களை பெருமை படுத்தியுள்ளார்.

https://www.instagram.com/p/BqRaXGrj6rM/?utm_source=ig_embed

சமீபத்தில் இவர் நெட்பிலிக்ஸ் தொடருக்காக இந்தியா வந்திருந்தார். அப்போது தனது மகளுக்கு ஏன் இந்தியா என்று பெயர் வைத்ததற்கான காரணத்தை சொன்ன கிரிஸ் 'அதுமட்டுமில்லாமல் நான் மும்பையில் ஷூட்டிங்கில் இருந்த போது மக்கள் என்னை தெருவில் பார்த்ததும் என்னை பின் தொடர்ந்தே ஓடி வந்தனர். நான் எங்கும் இது போன்றெல்லாம் கண்டதே இல்லை' என்று கூறியுள்ளார் கிரிஸ்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full