லியோ சக்ஸஸ் மீட்டிற்கு விஜய் மனைவி இதனால் தான் வரல - பிரபல நடிகர் சொன்ன தகவல்.

By subhashini · 7/11/2023

லியோ படத்தின் சக்ஸஸ் மீட்டுக்கு விஜயின் மனைவி சங்கீதா வராததற்கு காரணம் இதுதான் என்று பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கும் கருத்து தான் தற்பொழுது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் லியோ படத்தின் வெற்றி விழா குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் வெளியாகி இருக்கிறது.

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும், இந்த படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஆக, மொத்தம் படம் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய அளவில் லியோ வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் லியோ வெற்றியை சிறப்பாக கொண்டாட சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வெற்றி விழாவை நடத்தி இருக்கிறார்கள்.

லியோ வெற்றி விழா:

இந்த விழாவில் விஜய், லோகேஷ், திரிஷா உட்பட படக் குழுவினர் பலரும் கலந்து இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் விஜய் பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். அது மட்டும் இல்லாமல் சில சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருந்தார். ஆனால், இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜயின் மனைவி சங்கீதா கலந்து கொள்ளவில்லை. ஏற்கனவே விஜய்க்கும் விஜய்- சங்கீதா இருவரும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் சர்ச்சைகள் கொண்டிருக்கும் நிலையில் லியோ படத்தின் சக்சஸ் மீட்டுக்கு விஜயின் மனைவி சங்கீதா வராதது இன்னும் கேள்வி எழுப்பிருக்கிறது.

விஜய்-சங்கீதா சர்ச்சை:

மேலும், விஜய் படத்தின் விழாவிற்கு சங்கீதா கலந்து கொள்வது வழக்கம்தான். ஆனால், சமீப காலமாக அவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை. அதேபோல் வாரிசு படத்தின் விழாவிற்கு கூட சங்கீதா வரவில்லை. அப்போதிலிருந்தே இந்த பிரச்சனை சோசியல் மீடியாவில் புகைந்து கொண்டுதான் இருக்கிறது. இது குறித்து பலருமே பலவிதமான கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள். ஆனால், இதற்கு விஜய்- சங்கீதா தரப்பில் இருந்து எந்த ஒரு தெளிவான பதிலும் வரவில்லை .

பயில்வான் ரங்கநாதன் பேட்டி:

இந்நிலையில் நிகழ்ச்சியில் விஜயின் மனைவி சங்கீதா கலந்து கொள்ளாததற்கான காரணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறி இருப்பது, நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் கலந்து கொள்ளவில்லை. ஏற்கனவே அவர் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் வரவில்லை. இதனால் விஜய்- சங்கீதா இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக செய்திகள் வந்தது. அது அதுமட்டுமில்லாமல் திரிஷா- விஜய் இருவருக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதாகவும் கூறியிருந்தார்கள். அதற்கு ஏற்ப நிகழ்ச்சியில் திரிஷா வந்ததால் தான் சங்கீதா வரவில்லை என்று கூறுகிறார்கள்.

சங்கீதா வராதகாரணம் :

மேலும், லியோ படத்தில் ஒரு காட்சியில் விஜய்- திரிஷா முத்தக்காட்சி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு விஜய் ரசிகர்கள் கூட விமர்சித்து இருந்தார்கள். இதனால் விஜய்- சங்கீதா இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம். அதனால் தான் சக்சஸ் மீட்டுக்கு சங்கீதா வரவில்லை. ஒரு வெற்றிகரமான நிகழ்ச்சி என்றால் நடிகர், நடிகைகள், பணிபுரியும் கலைஞர்கள், விநியோகஸ்தர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. முதலில் இந்த நிகழ்ச்சியில் கமலஹாசன், ரஜினிகாந்த் எல்லாம் கலந்து கொள்ள கொள்வதாக இருந்தது. ஆனால், விஜய் மக்கள் இயக்க கூட்டம் வர இருப்பதால் அவர்கள் கலந்து கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full