சினிமா உலகில் இசையில் தனெக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் டி.எம் சவுந்தர்ராஜன். இவருக்கு என்று இன்று வரை ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதைப் பெற்றார். சௌந்தரராஜன் அவர்கள் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரைப்படங்களில் பாடினார். இவர் திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி பல பக்தி பாடல்களையும் பாடினார். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே 1944-ல் இவரது சகோதரரான டிஎம் கிருஷ்ணமூர்த்தி உடன் கச்சேரிகளில் பங்கேற்று உள்ளார்.

டி.எம்.எஸ் :

இவரின் காதல், துள்ளல், சோகம், தத்துவம் என கலவையான பத்தாயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளார், மேலும் அரசியல் காட்சிளை உயர்த்தி 4 ஆயிரம் பாடல்கள், 3 ஆயிரம் பக்தி பாடல்கள் என நாற்பது ஆண்டுகாலம் தமிழ் இசையுலகில் முடி சூடா மன்னனாக வாழ்ந்தவர் டி.எம் டி.எம் சவுந்தர்ராஜன். தற்போது திரையிசை திறமை கொண்ட பாடகர்கள், புதிய தொழில் நுட்பங்கள் என பலவிதமாக மாறி விட்டாலும் டி.எம்.எஸ் குரலில் பாடிய பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் இருந்து வருகிறது.

Advertisement

நான் ஆணையிட்டால் :

இவர் பாடிய அரசியல் பாடல்கள் காட்சிகளின் கொள்கைகளை பரப்பியது. உதாரணமாக எம்.ஜி.ஆருக்கு அவர் பாடிய பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் நீகிக்காது இருக்கின்றன. “நான் அணையிட்டால் அது நடந்து விட்டால்” பாடல் இன்று வரையில் அதிமுகவின் அரசியல் மேடைகள் ஒழித்து கொண்டிருக்கிறது. மேலும் மு. கருணாநிதியின் பிடித்தமான பாடகராக இருந்தவர் டி.எம்.எஸ் ஆனால் இவர் இருந்த போதும் சரி மறைந்த போதும் சரி இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

கருணாநிதிக்கு பிடித்தமானவர் :

இவருக்கு கடந்த 2003 ஆம் ஆண்டு மத்திய அரசு வழங்கும் பத்ம ஸ்ரீ விருது மட்டுமே இவருக்கு கிடைத்து. மேலும் இவரின் தீவிர ரசிகராக இருந்தவர் மு.க அழகிரி. இவர் அமைச்சராக இருந்த போது கலைஞரை அழைத்தது மாத்திரையில் டி.எம்.எஸ்க்காக விழா எடுத்தார் அதோடு டி.எம்.எஸ் மறந்த பிறகு அவருக்கு சிலை வைக்க முயற்சி செய்தார் ஆனால் இனனும் சிலை நிறுவப்படவில்லை. ஆனால் மு.க அழகிரி என்பதினால் இவருக்கு மரியாதை கிடைக்க வில்லை என்று சொல்ல முடியாது.ஏனெற்றால் திமுக ஆட்சியின் போது “செம்மொழியான தமிழ் மொழியாம் ” என்ற பாடலின் முதல் வரியையே இவர் தான் பாடினார் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement

மேலும் புதிய சூரியன் பார்வையில் உலகம் விழித்துக் கொண்ட வேலையில் என்ற பாடலையும் பாடியவர் டி.எம்.எஸ் தான். இந்த நிலையில் புத்தாண்டு பிறந்து உதய சூரியனும் அரியணை ஏறி விட்டது. இந்த சூழ்நிலையில் மு.கருணாநிதியின் வழியில் செல்வதாக கூறும் மு.க ஸ்டாலின் கலைஞர் டி.எம்.எஸ்க்கு புகழ் சேர்ப்பாரா என்பது மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

Advertisement

தீனா கூறியது :

இந்த நிலையில் இந்த விஷயம் தொடர்பாக இசையமைப்பாளர் தீனா கூறியதாவது `சிலை வைக்கிற நிகழ்வு டி.எம்.எஸ் மறந்த போதே நடந்திருக்க வேண்டும், ஆனால் அவை நடக்காதது துரதிர்ஷ்டம். எனினும் வரும் மார்ச் மாதம் அவருடைய பிறந்த நாளில் அவருக்கு உரிய மரியாதியை தமிழ் நாடு அரசு செலுத்த வேண்டும் என்று கூறினார். மேலும் இது என்னுடைய விருப்பம் மட்டும் கிடையாது ஒட்டுமொத்த இசையுலகத்தின் பிருப்பமும் கூட என்றார் இசையமைப்பாளர் தீனா.

Advertisement