2,000 கோடி லாபத்தில் உங்களுக்கு எவ்வளவு கொடுத்தாங்க? ரியல் தங்கல் நாயகி கொடுத்த பதிலடி
அமீர்கானின் நிஜ தங்கல் கதாநாயகி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அமீர் கான். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வரிசையில் அமீர்கான் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம் தான் தங்கல்.
இந்த படத்தை அமீர்கானே தயாரித்தும் இருந்தார். இந்த படத்தை நிதேஷ் திவாரி என்பவர் இயக்கியிருந்தார். இது ஹரியானாவின் முன்னாள் மல்யுத்த வீரர் மகாவீர் சிங் போகத் உடைய மகள்கள் கீதா போகத், பபிதா போகத் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளாக உருவாக்கிய உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.
தங்கல் படம்:
இந்த படம் உலக அளவில் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனையும், ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் பெற்றிருந்தது. இந்த படத்தில் மகாவீர் சிங் போகத் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் பிரபலங்கள் மத்தியிலுமே நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. மேலும், இந்த படத்தில் மல்யுத்த வீராங்கனையாக பபிதா போகத் நடித்திருந்தார்.
பபிதா போகத்:
இவர் உண்மையாலுமே மல்லித்த வீராங்கனை தான். 2012 ஆம் ஆண்டு உலக மல்யுத்த சாம்பியனில் வெண்கல பதக்கமும், காமன்வெல்த் போட்டியில் 2010 ஆம் ஆண்டு வெள்ளிப் பதக்கமும், 2014 ஆம் ஆண்டு தங்கப் பதக்கமும், 2018 ஆம் ஆண்டு வெள்ளிப் பதக்கமும் வென்றிருந்தார். அதோடு காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் 2009 மற்றும் 2011 ஆம் ஆண்டு தங்கப் பதக்கம் வென்று இருந்தார்.
பபிதா போகத் பேட்டி:
பின் 2013 ஆம் ஆண்டு ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கமும் வென்றிருந்தார். அதற்குப்பின் இவர் 2019 ஆம் ஆண்டு மல்யுத்தம் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்று பாஜக கட்சியில் இணைந்தார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், பபிதா போகத் கூறி இருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்துகிறது.
2000 करोड़ की फिल्म, फोगाट परिवार को मिला सिर्फ 1 करोड़
— News24 (@news24tvchannel) October 22, 2024
◆ बबीता फोगाट का चाय वाला इंटरव्यू मानक गुप्ता के साथ
◆ पूरा इंटरव्यू: https://t.co/LPKn1lwMLb@ManakGupta #ManakKaRapidFire @BabitaPhogat | #ChaiWalaInterview pic.twitter.com/Fgt843zYE1
படம் குறித்து சொன்னது:
அதாவது, தங்கல் படம் 2000 கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்ததாகவும், தயாரிப்பாளர் உங்களுக்கு எவ்வளவு கொடுத்தார் என்றும் கேட்டிருந்தார்கள். அதற்கு அவர், மொத்த வசூலில் ஒரு சதவீதம் கூட கிடையாது. ஒரு கோடி ரூபாய் கொடுத்தார்கள். நமக்கு மக்கள் உடைய அன்பும், மரியாதையும் மட்டுமே வேண்டும். மற்ற அனைத்தையும் விட்டு விடுங்கள் என்று என்னுடைய தந்தை என்னிடம் சொல்லி இருக்கிறார் என்று கூறியிருந்தார். இப்படி இவர் அளித்திருந்த பேட்டி வீடியோ தான் பாலிவுட்டில் பேசும் பொருளாகி இருக்கிறது.