கமல்ஹாசன், மணிரத்னம் இடையே என்ன தான் ப்ரச்சனை - ஆவேசத்தில் எழுத்தாளர் தீபா அளித்த பேட்டி

By subhashini · 12/6/2025

கமலின் தக் லைப் படத்தின் தோல்விக்கான காரணம் குறித்து எழுத்தாளர் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமல். கடந்த வாரம் கமல் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தக் லைஃப். இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் தான் இயக்கியிருக்கிறார். 38 ஆண்டுகளுக்கு பிறகு இவர்களின் கூட்டணியில் இந்த படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, நாசர், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படம் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளிலுமே வெளியாகி இருக்கிறது. இருந்தாலுமே முதல் நாளே இந்த படம் படும் மோசமான விமர்சனங்களை தான் குவித்தது. கமல் ரசிகர்களே இந்த படத்தை திட்டி இருந்தார்கள். இந்த படம் இந்தியன் 2வை விட மோசமாக இருப்பதாக ட்ரோல் செய்து வருகிறார்கள்.

தக் லைப் படம்:

இப்படி இருக்கும் நிலையில் தக் லைப் படத்தினுடைய தோல்விக்கான காரணம் குறித்து எழுத்தாளர் தீபா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், மணிரத்தினம்- கமலஹாசன் இருவரும் சேர்ந்து நாயகன் படத்திற்கு பின் பல ஆண்டுகள் கழித்து தக் லைப் பணியாற்றி இருப்பதால் இந்திய சினிமாவிலேயே மிகப்பெரிய புரட்சியாக இருக்கும் என்று எண்ணித்தான் படத்தை
பார்க்க போனேன். ஆனால், அந்த படம் கொஞ்சம் கூட எனக்கு ஒர்க் அவுட் ஆகவில்லை.

எழுத்தாளர் தீபா பேட்டி:

அதற்கு காரணம், சரியான திரைக்கதை திட்டமிடாமல் ஏகப்பட்ட காட்சிகளை எடுத்து வைத்து கடைசியில் எடிட்டிங் டேபிளில் இஷ்டத்துக்கு கட் செய்து வெளியிட்டது தான் படத்தின் உடைய தோல்விக்கு காரணம்.
சுஜாதா மற்றும் பாலகுமாரன் இருவருமே நிறைய படங்களுக்கு திரைகதை ஆசிரியராக பணியாற்றி இருக்கிறார்கள். குணா படத்தில் கமலஹாசனுடைய கதாபாத்திரமே ஒரு சிக்கலான கதாபாத்திரமாக பாலகுமாரன் உருவாக்கி இருப்பார். அவர் காதலிக்கும் அபிராமியை காதலியாக பார்க்காமல் கடவுளாகவே பார்க்கும் காட்சிகள் எல்லாம் அவ்வளவு நேர்த்தியாக பாலகுமாரன் எழுதியிருப்பார்.

https://www.youtube.com/watch?v=W1-5yWsF5MA

சினிமா நிலை:

சுஜாதாவின் எழுத்தில் எப்போதுமே ஒரு சுவாரசியம் இருந்து கொண்டிருக்கும். எந்திரன் படத்தில் ஒரு ரோபோ பெண்ணை காதலிப்பது மட்டுமே ஓன்லைன் ஆக இருக்கும். ஒரு ரோபோ பெண்ணை ஏன் காதலிக்கிறது? எப்படி காதலிக்கும்? காதல் கைகூடவில்லை என்றால் அது என்ன மாதிரியான ப்ரச்சனை செய்யும் என பல விஷயங்களை சுவாரசியமாக கொடுத்திருப்பார்கள். ஆனால், 2.0 படத்தில் அந்த சுவாரசியம் இல்லை. அக்ஷய்குமார் தான் படத்தினுடைய ஹீரோ. ஆனால், அவரை வில்லனாக காட்டி இருக்கிறார்கள். இப்போது இருக்கும் காலகட்டத்தில் திரைக்கதை ஆசிரியர்களுக்கு வாய்ப்புகள் இல்லை.

தோல்விக்கான காரணம்:

நல்ல திரைகதை ஆசிரியர்கள் இயக்குனர்களாக மட்டுமே அறிமுகமாக வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அதனால்தான் ஒரு படம் அல்லது இரண்டு படங்களுக்கு பிறகு பலருமே காணாமல் போய்விடுகிறார்கள். கமலஹாசன் எழுத்தில் வெளியான விருமாண்டி படம் எல்லாம் ஆச்சரியத்தின் உச்சம். அதே போல் மணிரத்தினம் இன்னமும் திரைக்கதை எழுதக்கூடியவர் தான். இருவரும் ஒன்றாக இணைந்து உருவாக்கிய நிலையில் தக் லைப் இந்த அளவு சுமாரான படமாக அமைந்தது ஏன் என்பதற்கு உண்மையான விளக்கத்தை அவர்கள் தான் சொல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full