இளையராஜா குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. 70 காலகட்டம் துவங்கி தற்போது வரை இவர் இசைத்து துவங்கி இருக்கிறார். இவருடைய இசையை ரசிக்காத ரசிகர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதோடு இவரது இசைக்காகவே ஓடிய படங்கள் பல உள்ளது. மேலும், இளையராஜாவின் பயோபிக் படம் உருவாகி வருகிறது.

இப்படி இருக்கும் நிலையில் இளையராஜா உடைய 4500 பாடல்களை எக்கோ அண்ட் அகி ஆகிய பாடல்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால், இந்த ஒப்பந்தம் 2014 ஆம் ஆண்டில் முடிந்துவிட்டது. ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை இல்லாமல் தன்னுடைய பாடல்களை எக்கோ, அகி ஆகிய நிறுவனங்கள் பயன்படுத்துவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தயாரிப்பாளரிடம் உரிமை பெற்ற பிறகு இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை இருக்கிறது. இளையராஜாவுக்கும் இசை பாடல்கள் மீதும் தனிப்பட்ட தார்மீக சிறப்புரிமை இருக்கிறது என்று 2019 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இருந்தும் இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

Advertisement

இளையராஜா குறித்த சர்ச்சை:

மேலும், இந்த வழக்கின் உடைய தீர்ப்பு ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் ஓத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளருக்கு இளையராஜா அனுப்பி இருக்கும் நோட்டீஸ் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் தன்னுடைய அனுமதி இல்லாமல் தான் இசையமைத்த பாடலை பயன்படுத்தி இருப்பதால் அந்த படத்தினுடைய தயாரிப்பாளர் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று இளையராஜா கேட்டு இருக்கிறார்.

இளையராஜா-மஞ்சுமோல் பாய்ஸ் சர்ச்சை:

இதற்கு படத்தினுடைய தயாரிப்பாளர், குணா படத்தின் கண்மணி அன்போடு பாடலுக்கு அந்த படத்தினுடைய தயாரிப்பாளரிடம் உரிய முறையில் அனுமதி பெற்று தான் பயன்படுத்தி இருக்கிறோம் என்று கூறி இருக்கிறார். இப்படி இருவருக்கும் மத்தியிலேயே காரசாரமாக விவாதம் சென்று கொண்டிருக்கும் நிலையில் இது தொடர்பாக பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் பேட்டியில், எம்எஸ் விஸ்வநாதனுக்கு கண்ணதாசனுக்கும் இடையில் இருந்த சரியான புரிதல் அவர்களுடைய காலகட்டத்திற்கு பின்பு எந்த இசையமைப்பாளர்களுக்கும் பாடலாசிரியர்களும் கிடையாது.

Advertisement

ஜெயமோகன் பேட்டி:

நான் பாடல்கள் எல்லாம் உருவாவதை பார்த்திருக்கேன். எல்லா இடங்களிலும் இசையமைப்பாளர் ஒரு பீடத்தில் அமர்ந்திருக்கக் கூடிய ஆளாகவும், அவருக்கு பணிவிடை செய்யக்கூடிய ஒருவராகத்தான் பாடலாசிரியர்களும் இப்போது இருக்கிறார்கள். பாடலாசிரியர்களும் ஒரு கலைஞர்கள் என்பதை இசையமைப்பாளர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இளையராஜாவிடம் பாடலாசிரியர்கள் அப்படி உட்கார்ந்து இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். இளையராஜா எனக்கு கடவுள் மாதிரி. எனக்கு அவர் மேல் நிறைய மரியாதை இருக்கிறது.

Advertisement

இளையராஜா குறித்து சொன்னது:

அதே சமயம் பாடலாசிரியர்களுக்கு அவர் மரியாதை கொடுப்பது கிடையாது. அவருடைய பெரும்பாலான பாடல்களை நான் கேட்க மாட்டேன். இளையராஜாவின் பாட்டை வயலினில் வாசித்தால் கேட்பேன். எம்எஸ்வி பேசும்போது கண்ணதாசன் எவ்வளவு மரியாதையாக பேசி இருக்கிறார். தன்னுடைய இணை என்றெல்லாம் கண்ணதாசனை கூறியிருக்கிறார். கண்ணதாசன் ஒரு வரி எழுதினால் இந்த உறவு எம்எஸ் விஸ்வநாதனுக்கு பிறகு யாருக்குமே கிடையாது. கண்ணதாசனுடைய பொற்காலத்துடனே அது எல்லாம் முடிந்துவிட்டது என்று தான் சொல்வேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement