அவர் ஒரு கோமாளி, கம்யூனிஸ்ட் பத்தி என்ன தெரியும் - விடுதலை படத்தையும் ஜெயமோகனையும் விமர்சித்த பிரபல எழுத்தாளர்.

By Manikandan · 3/4/2023

விடுதலை படம் குறித்து எழுத்தாளர் முருகவேல் விமரிசித்து கூறியிருப்பது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் விடுதலை. இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார். மேலும் இப்படத்தை தமிழ் நாட்டில் பிரபலமான விநியோக நிறுவனமான ரெட் ஜென்ட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

கதை :

.படத்தில் மலைப்பகுதியில் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு கனிம வளங்கள் நிறைய கிடைக்கிறது. இந்த கனிம வளங்களை எடுத்துக் கொள்ள தனியார் நிறுவனத்திற்கு அரசாங்கம் அனுமதி கொடுக்கிறது. இதற்கான வேலைகளில் அந்த தனியார் நிறுவனமும் ஈடுபட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த கனிம வளங்களை எடுக்கக்கூடாது என்று மக்கள் எதிர்த்து போராடுகின்றனர். இதனால் தங்கள் இடமும் பறிபோய் விடும் என்று பயப்படுகிறார்.

இந்த போராட்டத்தின் தலைவனாக விஜய் சேதுபதி இருக்கிறார். வழக்கம்போல் மக்கள் போராட ஆரம்பித்தால் அவர்களை அடக்கி ஒடுக்க வன்முறையை போலீஸ் கையில் எடுக்கிறது. இரக்கமில்லாமல் போலீஸ் மக்களிடம் நடந்து கொள்கிறார்கள். இந்த இரக்கமற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு மத்தியில் இரக்கமுள்ள கான்ஸ்டபில் ஆக நடிகர் சூரி இருக்கிறார். இவர் மக்களுக்கு எப்படியெல்லாம் உதவி செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

எழுத்தாளர் முருகவேல் :

இந்த நிலையில் பிரபல எழுத்தாளர் முருகவேல் சமீபத்தில் கொடுத்திருந்த பேட்டியில் விடுதலை படம் பற்றி மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில் சோளகர் தொட்டி நாவலில் இருந்தும் சிவ சுப்பிரமணியன் எழுதிய வீரப்பன் வாழ்ந்ததும் நூலில் எடுக்கப்பட்டு காட்சிகள் விடுதலை படத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். அதோடு எழுத்தாளர் முருகவேல் தன்னுடைய முகப்பு பக்கத்தில் விடுதலை படம் பற்றி கூறியிருக்கிறார்.

https://youtu.be/Wv230dIAepU

அரசியலோ வரலாறோ இல்லை :

அந்த பதிவில் பழனி பஞ்சாமிர்தம், பாண்டியன் ஊறுகாய், மாங்காய் ஜுஸ், லெமன் சோடோ, நர்சுஸ் காபி எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கி, மிக்ஸியில் அடித்து செய்த கதை தான் இயக்குனர் வெற்றிமாறனின் "விடுதலை படம்". அரசியலோ அல்லது வரலாற்று நேர்மையோ கொஞ்சமும் இல்லாத படம் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கடந்த மாதம் 31ஆம் தேதி வெளியான விடுதலை படம் பெரிய வெற்றியை பெற்று வசூலை குவித்து வருவது குறிப்பிடதக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full