'பாக்கியலட்சுமி' சீரியல பார்த்து பல பெண்கள் இப்படி ஆயிட்டாங்க - எழுத்தாளர் ப்ரியா தம்பி பகிர்ந்த தகவல்

By subhashini · 29/7/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இதனால் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள்.

இந்த தொடர், குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்கள் முன் உதாரணமாகவும், எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது. பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை இந்த சீரியல் உணர்த்துகிறது. தற்போது சீரியலில் நிதிஷை இனியா கீழே தள்ளியதால் அவர் இறந்து விடுகிறார். இதனால் இனியா மீது புகார் கொடுத்து விடுகிறார்கள். போலீஸ் இனியாவை தேடுகிறது.

பாக்கியலட்சுமி:

இந்த நிலையில் சீரியல் இன்னும் சில தினங்களில் முடிய இருக்கிறது. இது தொடர்பாக சீரியல் குழு அறிவித்து இருக்கிறது. ஐந்து ஆண்டுகள் இந்த சீரியல் ஒளிபரப்பாகி இருக்கிறது. மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்ளிலேயே அதிக எபிசோடுகள் கொண்ட பெருமையை இந்த தொடர் தான் பெற்றிருக்கிறது. இதனாலே கிளைமாக்ஸ் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியல் தொடர்பாக சீரியலின் திரைக்கதை ஆசிரியர் பிரியா தம்பி அளித்த பேட்டியில், வங்காள மொழியில் வெளிவந்த ஒரு தொடரின் தழுவல் தான் இந்த கதை. இந்த வங்க மொழி வெர்ஷனை பார்த்துவிட்டு சில விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு ஒளிபரப்பி இருந்தோம்.

ப்ரியா தம்பி பேட்டி:

அதற்குப்பின் தமிழ் தொலைக்காட்சி சூழலுக்கு ஏற்ப கதையை மாற்றிக்கொண்டோம். ஒரே லைனில் சொல்லனும் என்றால், புறக்கணிக்கப்படுகிற ஒரு மனைவி, குடும்பம் புருஷன், பிள்ளைகள் என்று வட்டத்தை போட்டு வாழ்கிறார். ஒரு கட்டத்தில் புருஷன் தன்னை ஏமாற்றி விட்டால் என்று அந்தப் பெண் என்ன செய்வாள் என்பதை வைத்து சீரியலை எடுத்துப் போனோம். இந்த தொடர் நிறைய பெண்களுக்கு கனெக்ட் ஆகிவிட்டது. அப்படிப்பட்ட பெண்கள்தான் நிறைய நம் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். என்னுடன் ரயிலில் பணித்த ஒரு பெண், தன் போலீஸ்கார கணவர் சகப் பெண் போலீஸிடம் தொடர்பு வைத்திருப்பதாக சொல்லி அழுது இருந்தார். அதனால் அவர் நிறைய பிரச்சனைகள் எல்லாம் எதிர்கொண்டிருந்தார்.

https://www.youtube.com/watch?v=SvUZzZpVPJ4

சீரியல் கதை:

அதே நேரம் சீரியலிலும் காலம் காலமாக இருந்துட்டு வருகிற கொடூரமான மாமியார், கொலை செய்ய துடிக்கிற மருமகள் என்று கதையை கொண்டு போகக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். பழைய ரூட்டை மாற்றி கொஞ்சம் வித்தியாசமாக ஒரு பாதையை கொடுக்க நினைத்தோம். மக்கள் மத்தியிலுமே வரவேற்பு கிடைத்தது. இதை நினைக்கும்போது ஒரு எழுத்தாளராக எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சேனல் தரப்பிலும் எனக்கு சுதந்திரத்தை கொடுத்திருந்தார்கள். எனக்குமே பெண்ணுக்கு பெண் எதிரி என்ற ரொம்ப பழசான டயலாக் எல்லாம் உடன்பாடில்லை. ஒரு ஆண் தப்பு செய்யும் போது அந்த பெண் மீதும் தப்பு இருந்தால் கூட முழு பழியுமே அவள் மீது மட்டுமே விழுகிறது. அது ஏன் என்ற கேள்வி எனக்குள் இருந்தது.

சீரியல் பற்றி சொன்னது:

நிறைய ஆண்கள் கூட இந்த சீரியல் ரசித்தார்கள். ஆரம்பத்தில் இந்த தொடருக்கு மக்கள் எப்படி வரவேற்பு கொடுத்தார்களோ கடைசி வரையும் அப்படி தான் கொடுத்து வருகிறார்கள். கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஒரு பெண் ஸ்விகியில் டெலிவரி பண்ண வந்திருந்தார். அதே நேரம் பாக்கியலட்சுமி ஓடிக்கொண்டிருந்தது. சீரியலை பார்த்துவிட்டு அந்த பெண், இந்த சீரியலை பார்த்து தான் நானும் இந்த வேலைக்கு வந்தேன். கையில் நமக்குன்னு நாலு காசு பார்க்கணும் என்று சொன்னார். அவரிடம் நான் என்னுடைய அடையாளத்தை சொல்லிக்கொள்ளவில்லை. அந்த பெண் மாதிரி எனக்கு தெரிந்து ஒரு 20 பேருக்கு மேலாவது சுயசொழில் தொடங்கி இருக்கிறார்கள். சீரியல் என்றால் ஒரு ஏளனம் இருக்கிற நம்மூரில் இது எவ்வளவு பெரிய சாதனை. இந்த சாதனையில் எனக்கும் பங்களிப்பது என்று நினைத்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full