தலைவி படத்தின் இரண்டாம் பாகத்தில் அம்மாவின் இது பற்றி தான் இருக்கும் - படத்தின் முக்கிய பிரபலம் தகவல்.

By Rajkumar · 23/9/2021

சமீபத்தில் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த தலைவி படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தலைவி படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், அரவிந்த் சுவாமி, சமுத்திரக்கனி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்து இருந்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு வந்த படம் தான் ‘தலைவி’.

இந்த படத்தில் ஜெயலலிதா அவர்கள் தன் பள்ளிப் படிப்பைத் தொடங்கி பின் அரசியலில் நுழைந்து முதலமைச்சராக நாட்டை ஆண்ட பாதை வரை என அனைத்தையும் இயக்குனர் விஜய் அழகாக சொல்லி இருக்கிறார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும்,வசூலையும் பெற்று இருந்தது. இந்நிலையில் தலைவி 2 படம் உருவாக இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் பாருங்க : முதல் சீசனில் 4 கோடி, இந்த சீசனுக்கு சல்மான் கானின் சம்பளம் எவ்ளோ தெரியுமா ? (கமல் நெனைச்சிக்கூட பாக்க முடியாது)

தலைவி படத்தில் பணியாற்றிய பாலிவுட் எழுத்தாளர் ரஜத் அரோரா என்பவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியது, கூடிய விரைவில் தலைவி 2 படம் உருவாக வாய்ப்பு இருக்கிறது. தலைவலி முதல் பாகத்தில் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்ற தோடே படம் முடிந்துவிட்டது. இரண்டாம் பாகத்தில் அவர் அரசியலில் சந்தித்த வெற்றி, தோல்வி,கஷ்ட, நஷ்டம் போராட்டம் என எல்லாத்தையும் சொல்ல இருக்கிறோம்.

இதனால் தலைவி 2 படம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. மேலும், தலைவி 2 படத்தில் நடிக்க கங்கனா ஓகே சொல்லிவிட்டால் இரண்டாம் பாகத்துக்கான கதை தொடங்கி விடுவோம் என்று கூறியிருந்தார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது. ஆனால், இரண்டாம் பாகத்தில் அம்மாவின் மரணம் பற்றிய விஷயங்கள் இருக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

behindtalkies AMP · Quick view
View full