69 வயதில் ‘WWF’ ஸ்டார் ஹல்க் ஹோகன் மூன்றாவது திருமணம் செய்ய இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் மிகப் பிரபலமான குத்துச்சண்டை நிகழ்ச்சியாக இருப்பது டபிள்யூ டபிள்யூ எப். இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு என்று உலகம் முழுவதும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இது அமெரிக்காவில் மிக பிரபல குத்துச்சண்டை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும்.

இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி பார்த்து வருகிறார்கள். மேலும், இந்த டபிள்யூ டபிள்யூ எப் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான குத்து சண்டை வீரராக திகழ்ந்தவர் ஹல்க் ஹோகன். 80, 90களில் இவருடைய குத்து சண்டை எல்லாம் வேற லெவலில் இருக்கும். இவர் இதுவரை ஐந்து முறை wwf சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். தற்போது இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பிட்னஸ் தொடர்பான போட்டிகளில் கலந்து கொண்டும் வெற்றிகளை பெற்றிருக்கிறார்.

Advertisement

ஹல்க் ஹோகன் முதல் திருமணம்:

இதனிடையே இவர் 1983 ஆம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த லிண்டா கிளாரிட்ஜை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு புரூக், நிக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். பின் இவர்கள் இருவரும் 25 ஆண்டுகளுக்கு மேல் ஒன்றாக வாழ்ந்து வாழ்ந்திருந்தார்கள். வழக்கம் போல் கணவன் மனைவிக்கு இடையில் வரும் சின்ன சின்ன பிரச்சனை வந்ததால் இருவருமே 2009 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்.

ஹல்க் ஹோகன் இரண்டாவது திருமணம்:

அதனை அடுத்து ஹல்க் ஹோகன் அவர்கள் பிரபல மேக்கப் ஆர்ட்டிஸ்டான ஜெனிபர் என்பவரை காதலித்தார். இவர்கள் இருவரும் 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். மேலும், திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் தான் இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்தார்கள். பின் 2021 ஆம் ஆண்டு இருவருமே கருத்துவேறு காரணமாக விவாகரத்து பெற்று பிரித்து விட்டார்கள். இந்த நிலையில் ஹல்க் ஹோகன் மூன்றாவது திருமணம் செய்ய இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

ஹல்க் ஹோகன் காதல்:

அதாவது ஹோகன் அவர்கள் பிட்னஸ், யோகா, பளுதூக்கும் போட்டிகளில் சமீபகாலமாக ஆர்வம் காட்டி வந்தார். இப்போது அவருக்கு 69 வயது ஆகிறது. இருந்தும் தன்னுடைய உடல் ஆரோக்கியம் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அப்போதுதான் யோகா பயிற்சியாளர் ஸ்கை டெய்லி உடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இவருக்கு 45 வயதாகிறது. பின் இருவருக்கும் ஒரு பார்ட்டியின் மூலம் தான் அறிமுகம் ஏற்பட்டு காதல் மலர்ந்திருக்கிறது.

Advertisement

ஹல்க் ஹோகன் மூன்றாவது திருமணம்:

சமீபத்தில் இவர்கள் தங்களுடைய நண்பர்களின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது தான் ஹோகன் தன்னுடைய மூன்றாவது திருமணம் பற்றி பேசி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் நீண்ட நாட்களாக நாங்கள் காதலித்து வருகிறோம். கூடிய விரைவிலேயே அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்றும் கூறுகிறார். தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரல் ஆகி வந்தது தொடர்ந்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement