யாரடி நீ மோகினி நட்க்ஷரா குழந்தைக்கு நடந்த விசேஷம் - அழகான தமிழ் பெயர். என்ன பெயர் தெரியுமா?

By Rajkumar · 24/1/2024

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி தொடர் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சீரியல் நடிகை நட்சத்திர கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த தொடர் நிறைவடைந்த நிலையில் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வள்ளி திருமணம் தொடரில் நடித்து வந்தார். இப்படி ஒரு நிலையில் நக்ஷத்திராவிற்கு திடீர் திருமணம் நடந்து முடிந்தத்த்து.

நக்ஸத்ரா குறித்து பேசிய அவரின் நெருங்கிய தோழியும், சீரியல் நடிகையுமான ஸ்ரீநிதி நக்ஸத்ரா குறித்து பேசிய போது 'நட்சத்திரா ரொம்ப கஷ்டப்பட்டு சினிமா துறைக்கு வந்து இருக்கா, அவ நிறைய தப்பான விஷயங்கள் செய்து இருக்கா, ஆனா அவ தப்பான பொண்ணு கிடையாது. நட்சத்திரா ஒரு பையனை காதலிக்கிறார், ஒரு மாதத்திலேயே நிச்சயதார்த்தம் கூட முடிந்துவிட்டது. ஆனால் எங்களுக்கு அது தெரியாது.

ஸ்ரீநிதி குறித்து நக்ஸத்ரா :

அவ எதோ மன அழுத்தத்தில் இருக்கிறார். அவள் சொல்வதை எல்லாம் கண்டுகொள்ள வேண்டாம். அவள் என்மீது உள்ள அக்கரையில் அப்படி செய்துகொண்டு இருக்கிறாள். நான் சந்தோசமாக தான் இருக்கிறேன்' என்று கூறி இருந்தார். ஆனால், தனது திருமணம் குறித்து எந்த தகவலையும் அவர் கூறவில்லை. இப்படி ஒரு நிலையில் நக்ஸத்ராவிற்கும் விஸ்வா என்பவருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திடீர் திருமணம் நடைபெற்றது.

யார் இந்த விஷ்வா :

நக்ஸத்ராவை திருமணம் செய்துள்ள விஸ்வா, ஆழ்வார் திருநகர் பகுதியில் டாட்டூ கடை வைத்திருக்கிறார் என்றும் ஜீ தமிழ் சேனலில் சில சீரியல்களின் தயாரிப்பு நிர்வாகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார் என்றும் கூறியுள்ளனர். அவரது சகோதரி கூட சீரியல் நடிகை தானாம். அதுமட்டுமல்லாமல் விஷ்வாவின் குடும்பத்துக்கு சினிமா தயாரிப்பாளரும் நடிகர் விஜயின் உறவினருமான சேவியர் பிரிட்டோ குடும்பத்துடன் நல்ல நட்பு உண்டாம்.

நக்ஸத்ரா குறித்து ஸ்ரீநிதி ஏற்படுத்திய சர்ச்சை :

நட்சத்திராவின் வாழ்க்கைய காப்பாத்த முடியல, என் நம்பரை பிளாக் பண்ண வச்சிட்டாங்க..நட்சத்திராவின் சம்பளம் 2.5 லட்சம் ஆனா அவ கணக்கில் 10 ஆயிரம் கூட இல்லை, இதெல்லாம் கேட்டதற்கு என்னை அடிக்கிறாங்க, திட்றாங்க, சித்து நிலைமை நட்சத்திராவுக்கு நடந்துடும்ன்னு பயமா இருக்கு என்றும் அவர் கூறி இருந்தார். இதுகுறித்து விளக்கமளித்த நக்ஸத்ரா 'நான் லவ் பண்ண பையன் பேமிலி என்ன பிடிச்சி வச்சி இருக்காங்கன்னு சொல்றது எல்லாம் பொய்.

நக்ஷத்திராவின் பெண் குழந்தை :

தனது தாத்தா வீட்டில் தான் வளர்ந்து வருவதாகவும் தாத்தாவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாததால் அவர் எனது திருமணத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை பட்டதால் ஒரே நாளில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டதாக நக்ஷத்ரா கூறி இருந்தார். இப்படி பல பிரச்சனைக்கு நடுவே இவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. மேலும், தங்கள்மகளுக்கு இதழ் என்று அழகாக தமிழில் பெயர் வைத்து இருந்தனர். இந்த நிலையில் இந்த தம்பதி தங்கள் மகளுக்கு முதன்முறையாக உணவு ஊட்டும் நிகழ்ச்சியான அன்ன பிரச்சன்னம் நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full