ஓயின் ஷாப் சென்று சரக்கு வாங்கிய சீரியல் நடிகை - வலிமை சர்ச்சை அடங்குவதற்குள் அடுத்த சர்ச்சையை கிளப்பிட்டாரே.

By Rajkumar · 27/4/2022

தற்போது இருக்கும் காலகட்டத்தில் சினிமா நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நடிகைகளும் ரசிகர் மத்தியில் ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையே வைத்து வருகின்றனர். அதனால் சின்னத்திரை நடிகைகள் எது செய்தாலும் அது பேசு பொருளாக மாறிவிடுகிறது. இதனால் ஒரு சில சமயங்களில் சின்னத்திரை பிரபலங்கள் சர்ச்சையிலும் சிக்கிவிடுகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் அஜித்தின் வலிமை படம் குறித்து பேசி அஜித் ரசிகர்களால் தொல்லைகளை சந்தித்து வருபவர் சின்னத்திரை சீரியல் நடிகை ஸ்ரீநிதி.

வீடியோவில் 4 : 17 நிமிடத்தில் பார்க்கவும்

https://youtu.be/dDcQdC_G85Y

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7C உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை ஸ்ரீநிதி.  இவர் குழந்தை பருவத்தில் இருந்தே பல சீரியல்களில் நடித்து வருபவர். தற்போது இவர்  நீ மோகினி, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான வலிமை படம் பார்த்த ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

வலிமை பட விமர்சனம் :

அந்த வகையில் சீரியல் நடிகை ஸ்ரீநிதியும் வலிமை படத்தை பார்த்து கமெண்ட் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் வலிமை படத்தில் ஒரு சின்ன ரோலில் ஸ்ரீநிதியின் நெருங்கிய தோழி சைத்ரா ரெட்டி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், ஸ்ரீநிதி இடம் மீடியாக்காரர்கள் வலிமை படம் எப்படி இருக்கிறது என்று கேட்கிறார்கள். அதற்கு ஸ்ரீநிதி கூறியது, அஜித் சாரை நான் நேரில் கூட பார்த்துவிடுவேன். வலிமை படம் பார்க்க பொறுமை வேண்டும். ஆனால், எனக்கு பார்க்க பொறுமை இல்லை.

https://twitter.com/TamilCensor/status/1517531964961660936

திட்டி தீர்க்கும் அஜித் ரசிகர்கள் :

படம் எப்படி இருக்குனு நீங்களே போய் பாருங்கள். ரொம்ப கொடுமையாக இருக்கிறது. அஜித் சார் கியூட்டாக நடித்திருக்கிறார். ஆனால், படம் ஓடுவதை விட அதிகம் பைக் தான் ஓடுகிறது என்று கூறினார். இப்படி இவர் கூறி இருந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானது. இதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் பலரும் இவரை திட்டி தீர்த்து வருகின்றனர். அதிலும் சிலர் இவருக்கு கொலை மிரட்டலும் விட்டுவருகின்றனராம்.

கற்பழிப்பு மிரட்டல் விடுத்த ரசிகர்கள்:

கடந்த சில நாட்களுக்கு முன் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர், பேச்சிலர் படத்தில் நடித்த நடிகை திவ்யபாரதி மாதிரி உன்னை கர்ப்பமாக்கி நடு ரோட்டில் விடனும் என்றெல்லாம் கமென்ட் போட்டு இருந்தார்கள் என்று வேதனையுடன் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த சர்ச்சை ஓய்வதர்குள் அடுத்த சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் ஸ்ரீநிதி. அது என்னவெனில் சமீபத்தில் இவர் தனது நண்பர்களுக்காக சரக்கு வாங்க ஒயின் ஷாப்பிற்கே சென்று சரக்கை வாங்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

A post shared by Nidhi (@sreenidhi_)

சரக்கு வாங்கிய ஸ்ரீநிதி :

இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் 'நான் மகிழ்ச்சியாக இருப்பதை உணர்ந்தேன். என்னை பின் தொடர்பவர்கள் நான் மீடியா என்பதால் என்னை பின் தொடரவில்லை. நான் உண்மையாக இருப்பதால் தான். எனவே, சொல்வார்கள் சொல்லிக்கொண்டே இருக்கட்டும் அவர் அதை மட்டும் தான் செய்பவார்கள். எனக்கு எப்போதும் அன்பை மட்டுமே அளித்த தளத்தில் நான் மீண்டும் நானாக மாறத் தொடங்குகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full