பீஸ்ட்ட 'Kgf' எப்படி எதிர்கொள்ள போகுது - பத்திரிகையாளர் கேள்விக்கு யாஷ் சொன்ன பதில். பாராட்டும் ரசிகர்கள்.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். கடைசியாக விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது.
மேலும், இந்த படத்தின் அரபிக்குத்து பாடல் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். இந்த பாடல் வெளியிட்டு மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் சென்று சாதனை படைத்துள்ளது. இதனை தொடர்ந்து பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த பாடல் ஜாலியோ ஜிம்கானா என்று தொடங்குகிறது. இந்த பாடலை கு. கார்த்திக் எழுதி இருக்கிறார்.
கேஜிஎப் 2 vs பீஸ்ட் மோதல்:
மேலும், இந்த பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டும் இல்லாமல் விஜய்யின் பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் 13 ஆம் படம் உலகமெங்கும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படி ஒரு நிலையில் கேஜிஎப் 2 படம் பீஸ்ட் படத்துடன் மோத இருப்பதாக சில தினங்களாகவே சோசியல் மீடியாவில் தகவல் உலாவந்து கொண்டிருக்கிறது. கேஜிஎப் 2 மற்றும் பீஸ்ட் ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியிடுவதாக கூறப்பட்ட நிலையில் பீஸ்ட் படம் வெளியாகி ஒரு நாள் இடைவெளியில் அடுத்த நாள் கேஜிஎப் 2 படம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் யாஷ் சொன்னது:
மேலும், ஒரு நாள் இடைவெளி இருந்தாலும் ரசிகர்கள் இதை பெரிய மோதல் ஆகவே பார்க்கின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கே ஜி எஃப் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் யாஷ், சஞ்சய் தத் உட்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டிருந்தனர். அப்போது பத்திரிகையாளர்கள் படத்தின் கதாநாயகன் யாஷிடம் பல கேள்விகளை கேட்டு இருந்தார்கள். அப்போது அதில் ஒருவர், விஜய்யின் பீஸ்ட் உடன் நடக்கும் மோதலை நீங்கள் எப்படி சமாளிப்பீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு யாஷ் கூறியிருப்பது, இரண்டு படங்கள் ரிலீஸானால் அது பீஸ்ட் மற்றும் கேஜிஎப் 2 தான்.
https://www.youtube.com/watch?v=XZWll53zq6g
விஜய் குறித்து யாஷ் கூறியது:
கே ஜி எஃப் 2 vs பீஸ்ட் கிடையாது. இது எலக்சன் அல்ல. எல்லோரிடமும் ஒரே ஒரு ஓட்டு தான் இருக்கும். அதை அதிகம் பெறுபவர் வெற்றி பெறுவார். ஆனால், இது சினிமா. இரண்டு படங்களையும் பார்க்கலாம். அவர் சினிமாவுக்காக நிறைய செய்திருக்கிறார். விஜய் சார் எனக்கு சீனியர். விஜய் சார் மீது அதிக மரியாதை இருக்கிறது. விஜய் சார் ரொம்ப அற்புதமாக நடனமாடுபவர். இவருக்கு இவ்வளவு ரசிகர்கள் இருந்தும் மிகவும் எளிமையாக இருப்பார். இதனால் தான் மக்கள் இவரை கொண்டாடுகிறார்கள். இவருடைய படங்கள் எல்லாமே நான் பார்த்திருக்கிறேன். பீஸ்ட் படத்தை நிச்சயம் நான் பார்ப்பேன். அதே போல விஜய் ரசிகர்கள் கேஜிஎப் 2 படத்தை நிச்சயம் பார்ப்பார்கள் என்று கூறி இருந்தார். இப்படி யாஷ் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கன்னட மொழியில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்பவர் யாஷ்.
https://twitter.com/VijayIsMyLife/status/1508270412601339906?t=Do_16-PyCVme-LKxD6b_bg&s=08
நடிகர் யாஷின் திரைப்பயணம்:
இவர் நடித்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. கன்னட மொழியில் ராக்கிங் ஸ்டார் என்று இவரை அழைப்பார்கள். மேலும், இவருக்கு பெரும் புகழை சேர்த்து தந்த படங்களில் ஒன்று கே ஜி எஃப். இந்த படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியிட இருக்கிறார்கள். பிற மொழிகளிலும் இந்தப் படம் நேரடியாக வெளியிட இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கேஜிஎப் படம் வெளிவந்த போது கன்னட மொழி ரசிகர்கள் மட்டுமில்லாமல் பல மொழி ரசிகர்களும் இந்த படத்தை பார்த்துக் கொண்டாடிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.