தான் இறந்த செய்தியை கண்டு ஷாக்கடைந்த யாஷிகா.! யார் பாத்தா வேல டா இது.!
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த யாஷிகா பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பெரும் பிரபலமடைந்தார். இந்நிலையில் யாஷிகா தற்கொலை செய்துகொண்டதாக இணையத்தில் செய்தி வெளியாக அதனை கண்டு யாஷிகா அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.
https://twitter.com/iamyashikaanand/status/1097083324282003458
கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாஷிகா என்ற நடிகை ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். 'மன்னர் வகையறா' படத்தில் நடித்தவர் நடிகை யாஷிகா (வயது 21). துணை நடிகையான இவர், திருப்பூரைச் சேர்ந்தவர். மேரிஷீலா ஜெபராணி என்பது இவரின் சொந்தப் பெயர்.
வடபழனியில் உள்ள விடுதியில் தங்கியிருந்து, சினிமாவில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்துவந்தார். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். யாஷிகாவுக்கும் பெரம்பூரைச் சேர்ந்த அரவிந்த் என்ற இளைஞரை காதலித்து வந்ததோடு பெரவள்ளூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து, திருமணம் செய்துகொள்ளாமல் இருவரும் வாழ்ந்துவந்தனர். சில நாள்களுக்கு முன், இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
கோபமடைந்த அரவிந்த், தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதனால், யாஷிகா வேதனை அடைந்தார். நேற்று முன்தினம், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் சீரியல் நடிகை யாஷிகாவிற்கு பதிலாக பிக் பாஸ் யாஷிகா தற்கொலை செய்துகொண்டதாக பெங்காலி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/JoySicily/status/1097087141589397504
இந்த தகவலை ரசிகர் ஒருவர் யாஷிகாவிற்கு டேக் செய்ய அதனை கண்டு யாஷிகா பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், யாஷிகாவின் ரசிகர்கள் அனைவரும் அந்த செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது புகார் அளிக்குமாறு கூறி வருகின்றனர்.