‘தி வேக்சின் வார்’ படம் குறித்து உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய சினிமாவில் மிக பிரபலமான இயக்குனராக இருப்பவர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி. இவர் திரைப்பட இயக்குனர் மட்டும் இல்லாமல் திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர், சமூக ஆர்வலர் திரைக்கதை பன்முகங்களை கொண்டவர்.

இவர் சாக்லேட் என்ற படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமாகியிருந்தார். அதன் பின் இவர் பல படங்களை இயக்கியும், தயாரித்தும் இருக்கிறார். குறிப்பாக இவர் இயக்கியும் தயாரித்தும் வெளிவந்த தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு தேசிய விருதும் கிடைத்திருந்தது. அதன் பின் 2012 ஆம் ஆண்டு இவர் இயக்கிய ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Advertisement

விவேக் அக்னிஹோத்ரி திரைப்பயணம் :

இந்த படம் இந்தியா முழுவதும் பரவலாக பேசப்பட்டது. இதனை அடுத்து தற்போது இவர் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் தி வேக்சின் வார். இந்த படத்தில் அனுபம் கெர், நானா படேகர், சப்தமி கவுடா, பல்லவி ஜோஷி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் கோவிட் தொற்று, கோவிட் கால மருத்துவர் ஆராய்ச்சிகள், தடுப்பூசிகள் ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது.

தி வேக்சின் வார் படம்:

மேலும், இந்த படம் செப்டம்பர் 28ஆம் தேதி திரையரங்களில் வெளியாகியிருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அது மட்டும் இல்லாமல் பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பார்த்து பாராட்டி இருந்தார்கள். அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து இருந்த பிரதமர் மோடியும் இந்த படம் குறித்து பாராட்டி இருந்தார். இந்த நிலையில் தற்போது உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த படத்தை பார்த்து பாராட்டி இருக்கிறார்.

Advertisement

யோகி ஆதித்யநாத் அளித்த பேட்டி:

இது தொடர்பாக அவர் கூறியிருப்பது, தி வேக்சின் வார் என்ற படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம் உலக அரங்கில் இந்தியாவின் அறிவியல் சாதனைகளை எடுத்துரைக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படம் இந்தியாவுக்கு எதிரான சதிகளை அம்பலப்படுத்தியும், இந்திய விஞ்ஞானிகளால் நடத்தப்பட்ட அற்புதமான ஆராய்ச்சிகளையும் கூறி இருக்கிறது. சிலருடைய நோக்கங்களையும், நடவடிக்கைகளையும் உலக அரங்கில் அம்பலப்படுத்துவது அவசியமான ஒன்று.

Advertisement

தி வேக்சின் வார் படம் குறித்து சொன்னது;

இந்த விஷயத்தில் தி வேக்சின் வார் திரைப்படம் மிகச்சிறந்த முன்னுதாரணம். கொரோனா போராட்டம் என்பது தனி நபர் போராட்டம் இல்லை. பிரதமர் மோடி அதனை கேப்டனை போல வழி நடத்தி இருந்தார். பொய் பிரச்சாரத்தின் மூலம் சிலர் இந்த போராட்டத்தை பலவீனப்படுத்த முயன்றிருந்தார்கள். நாட்டுக்கு எதிரானது போன்ற சதிகளை தி வேக்சின் வார் திரைப்படம் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது என்று பேசி இருக்கிறார்.

Advertisement