நெல்சனுக்கு டாக்டர் படத்துல வர கிங்ஸ்லி ரோல் தான் சரியா இருக்கும், ஏன்னா - யோகி பாபு ஓபன் டாக்
நெல்சன் நடிக்க வருபவது தொடர்பாக நடிகர் யோகி பாபு அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக நெல்சன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கியதன் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தை நெல்சன் இயக்கி இருந்தார்.
இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது படமாக நெல்சன் அவர்கள் விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பீஸ்ட் படம் தோல்வி அடைந்தது. இதனால் நெல்சனை பயங்கரமாக விமர்சித்து ட்ரோல் செய்திருந்தார்கள்.
நெல்சன் குறித்த தகவல்:
இன்னொரு பக்கம் சினிமாவில் லோகேஷ் உடைய வளர்ச்சி நன்றாக இருந்ததால் அவருடன் நெல்சனை ஒப்பிட்டு எல்லாம் விமர்சித்து இருந்தார்கள். பின் நெல்சனுக்கு கம்பேக் கொடுக்கும் விதமாக ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இருந்தது. ரஜினியின் “ஜெயிலர்” படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் கிருஷ்னன், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், மோகன் லால், விநாயகம் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள்.
ஜெயிலர் 2 படம்:
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். படத்தின் ஒவ்வொரும் பாடலும் பட்டைய கிளப்பி இருந்தது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த பாடம் வசூலை வாரி குவித்தது இதை அடுத்து நெல்சன் அவர்கள் ஜெயிலர் 2 படத்தை எடுத்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளில் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
யோகி பாபு பேட்டி:
மேலும், நெல்சனின் பிறந்த நாளை முன்னிட்டு ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுத்த புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி இருந்தது. அது மட்டும் இல்லாமல் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் நெல்சன் நடிக்கிறார் என்றெல்லாம் தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக பலருமே கேள்வி கேட்டுக் கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் யோகி பாபு, நான் நெல்சனை நடிக்க சொல்லி தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
நெல்சன் நடிப்பு பற்றி சொன்னது:
அவர்தான் நடிக்க மறுக்கிறார். இப்போது கூட நான் அவரிடம், நெல்சன் நீ நடிக்கவா என்று சொன்னேன். உடனே அவர், வேண்டாம் என்று சொல்லிவிட்டார். நெல்சன் நடிக்க வந்தால் நன்றாக இருக்கும். அவர் செம சென்சிபிளான நபர். யாருக்கு என்ன தெரியும்? அடுத்து அவரே கதை எழுதி, அவரே நடிக்கலாம். டாக்டர் படத்தில் வர ரெடின் கிங்ஸ்லி கதாபாத்திரத்தில் நெல்சன் நடிக்கலாம். அந்த படத்தில் வர கிங்ஸ்லி கதாபாத்திரம் மாதிரி தான் நெல்சனுமே இருப்பார். இந்த விஷயத்தை நான் நெல்சன் இடமே சொல்லி இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்