யோகி பாபுவிற்கு திருமணமானதால் சோகத்தில் ஆழந்த திருமணமான நடிகை. நடிகையின் சோகமான வீடீயோவை பாருங்க.

By Rajkumar · 15/2/2020

தமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும் சந்தானத்திற்கு பிறகு காமெடி நடிகர்களில் அதிக புகழையும்,பிரபலத்தையும் குறுகிய காலத்திலேயே சம்பாதித்தவர் காமெடி நடிகர் யோகி பாபு. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் யோகி பாபு ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார்.மேலும், ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் கலக்கி கொண்டு வருகிறார்.

https://twitter.com/sivakubendiran/status/1228644949530304513

அதுமட்டுமல்லாமல் தற்போது பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு. இந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் 20 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கைவசம் வைத்து இருக்கிறாராம் யோகி பாபு. யோகி பாபுவிற்கு கடந்த வாரம் திருமணம் நடந்து முடிந்தது. இவர் வேலூரை சேர்ந்த மஞ்சு பார்கவி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். யோகி பாபு அவர்களுடைய குலதெய்வ கோவிலில் மிகவும் சிம்பிளாக தன்னுடைய திருமணத்தை செய்து கொண்டார். இந்த திருமணத்தில் திரை பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் திருமணமான பெண் ஒருவர் டிக் டாக்கில் தொடர்ந்து யோகி பாபு புகைப்படத்தை வைத்து டிக் செய்து வருகிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், அந்த வீடியோவில் பேசியுள்ள அந்த நபர், தான் ஒரு நடிகை என்றும் 16 வயது முதல் சினிமாவில் இருந்து வருதாகவும், தான் ஒரு தவிர யோகி பாபுவின் ரசிகை என்றும் கூறியுள்ளார். மேலும், பலரும் என்னுடைய கணவர் திட்டவில்லையா என்று கேட்கிறார்கள். நான் மற்றவர்களுடன் வீடியோ செய்தால் தானே திட்ட வேண்டும் எனக்கு பிடித்தவருடன் வீடியோ செய்தால் ஏன் திட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் இவரது டிக் டாக்கில் யோகி பாபுவின் புகைப்படத்தை வைத்து பல்வேறு விடீயோக்களை வெளியிட்டுள்ளார். அதிலும் யோகி பாபு திருமணம் ஆன பிறகு யோகி பாபு திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பேக்கிரௌன்டில் வைத்து சோகமான பாடலுக்கு டிக் டாக் செய்துள்ளார். அந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாக ஹீரோ ஹீரோயின்களுக்கு தான் இப்படிபட்ட ரசிகர்கள் இருப்பார்கள் ஆனால், காமெடி நடிகர் ஒருவருக்கு இப்படி ஒரு ரசிகை இருப்பதை கேள்விப்படுவது இதுவே முதன் முறை.

behindtalkies AMP · Quick view
View full