தமிழில் எண்ணெற்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருபவர் காமெடி நடிகர் யோகி பாபு. இவரது உண்மையான ப்ளஸ்ஸே இவரது உருவ அமைப்பு தான் என்றே கூறலாம். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரது தோற்றம் பிடித்து போக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கூடி வருகிற்து. 

தமிழ் சினிமாவில் சந்தானம் மற்றும் வடிவேலுவிற்கு பிறகு காமெடியில் சூரி மற்றும் யோகி பாபு தான் காமெடியில் கலக்கி வருகின்றனர். இவர்கள் இருவர் தான் தற்போது  பெரும்பாலான ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்து வருகின்றார்.யோகி பாபுவின் கைவசம் தற்போது 19 படங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தற்போது விஜய் 63 படத்திலும் கமிட் ஆகியுள்ளார் யோகி பாபு. அட்லீ இயக்கி வரும் இந்த படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளார்,மேலும்,நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் விவேக் விஜய்யின் இந்த படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் போலீஸ் காரரிடம் இரவு நடு ரோட்டில் அடிவாங்கிய சம்பவம் குறித்து கூறியுள்ளார் யோகி பாபு.

இதுகுறித்து பேசிய அவர், ஒரு முறை நான் நாடகத்தை முடித்துவிட்டு இரவு நேரத்தில் தனியாக பைக்கில் சென்று கொண்டிருந்தேன். அப்போது போலிஸார் இருவரைஎன்னை மடக்கி பிடித்து விசாரணனை செய்தார்கள். அந்த நேரம் சென்னையில் சாலையில் நின்று கொண்டிருக்கும் பைக்குகள், கார்களை மர்ம ஆசாமி ஒருவர் எரித்த சம்பவம் பெரும் பரப்பானது.

Advertisement

நான் பார்ப்பதற்கு ரவுடி போல இருந்ததால் நான் தான் அந்த ஆசாமி என சந்தேகித்தார்கள். நான் எவ்ளவோ சொல்லியும் அவங்க என்னை நம்புவதாக இல்லை. அதன் பின்னர் போலிஸார் என்னை கன்னத்தில் பளார் என்று அறைந்தார். காது நரம்புகள் வலிக்கும் அளவிற்கு இந்த அடியின் வலிஇருந்தது. அதன் பின்னர் என்னை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கே நீண்ட நேரமாக வைத்து விசாரித்து நம்பிக்கை வந்த பிறகு தான் விடுவித்தார்கள் என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement