காமெடிக்காக இல்லைங்க இந்த காரணத்தால் தான் யோகி பாபு விஜய் 63 யில் போட்டாங்களாம்.!

By Rajkumar · 12/4/2019

தமிழில் எண்ணெற்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருபவர் காமெடி நடிகர் யோகி பாபு. இவரது உண்மையான ப்ளஸ்ஸே இவரது உருவ அமைப்பு என்றே கூறலாம். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரது தோற்றம் பிடித்து போக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கூடி வருகிறது.

தமிழ் சினிமாவில் சந்தானம் மற்றும் வடிவேலுவிற்கு பிறகு காமெடியில் சூரி மற்றும் யோகி பாபு தான் காமெடியில் கலக்கி வருகின்றனர். இவர்கள் இருவர் தான் தற்போது வெளியாகும் பெரும்பாலான ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்து வருகின்றார்..யோகி பாபுவின் கைவசம் தற்போது 19 படங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விஜய் 63 படத்திலும் கமிட் ஆகியுள்ளார் யோகி பாபு. அட்லீ இயக்கி வரும் இந்த படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளார்,மேலும்,நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் விவேக் விஜய்யின் இந்த படத்தில் நடிக்க உள்ளார்.அதே போல யோகி பாபவும் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் .

இவர் அஜித்தின் விஸ்வாசம் படத்திலும் நடித்துள்ளார். அதே போல விஜயுடன் மெர்சல், சர்கார் போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால், விஜய் 63 யில் இவருக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு இவரது காமெடி மட்டும் காரணம் இல்லை.
யோகிபாபு சினிமாவிற்கு வருவதற்கு முன் கால்பந்து பிளேயராக இருந்தவர் என்றும் தற்போதும் கால்பந்தாட்டத்தில் அவர் கெட்டிக்காரர் என்பதும் தான் அவரை தளபதி-63யில் இணைத்ததற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதே போல கதிர் நடித்துள்ள ஜடா படத்தில் கூட யோகி பாபு கால்பந்த்து வீரராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full