யோகி பாபுவா இது.! பாவம் ஒரு காலத்துல எப்படி இருந்திருக்கார் பாருங்க.!

By Rajkumar · 8/2/2019

தமிழில் எண்ணெற்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருபவர் காமெடி நடிகர் யோகி பாபு. இவரது உண்மையான ப்ளஸ்ஸே இவரது உருவ அமைப்பு தான் கூறலாம். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரது தோற்றம் பிடித்து போக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கூடின, அந்த பூரிப்பில் இவரது உடல் எடையும் கூடி கொண்டே வந்தது. இதனால் தற்போது மிகவும் உடல் எடை கூடி குண்டாக உள்ளார் யோகி. 

சமீபத்தில் நடிகர் யோகி பாபு சில ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட அவருடைய பழைய புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் பார்ப்பதற்கு சற்று ஒல்லியாகவே இருக்கிறார் நடிகர் யோகி பாபு . இதனால் அந்த புகைப்படத்தில் ‘நானும் ஒல்லிதான் ஒரு காலத்துல’ என்று கிண்டலாக கேப்ஷன் ஒன்றையும் எழுதியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை செல்லமாக கலாய்த்து வருகின்றனர். 

தமிழ் சினிமாவின் பிஸியான காமெடி நடிகராக இருந்து வரும் யோகி பாபு சினிமாவில் வருவதற்கு முன்னாள் ‘லொள்ளு சபா ‘ நிகழ்ச்சியில் நடித்து வந்தார். அதுபோக சில தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். யோகி பாபுவின் பழைய புகைப்படம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. அந்த புகைப்படமும் எதோ ஒரு தொலைக்காட்சி தொடரில், அவர் நடித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் போன்று தான் தோன்றுகிறது.

மேலும், தமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கி யோகி பாபு தற்போது விஜயுடன் விஜய் 63 படத்திலும் நடித்து வருகிறார். மேலும், ஜாம்பி,தர்மபிரபு போன்ற படங்கள் ரிலீசுக்கு வைட்டிங்கில் உள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full