யோகி பாபு பட வெளியீடு தயாரிப்பாளரை நிர்வாணமாக்கி அடித்து உதைத்து சித்ரவதை.

By Arun · 7/12/2022

யோகி பாபு பட வெளியீடு தயாரிப்பாளரை நிர்வாணமாக்கி அடித்து உதைத்து சித்திரவதை செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் யோகி பாபு. தற்போது யோகி பாபு இல்லாத படமே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு பல படங்களில் யோகி பாபு நடித்துக் கொண்டிருக்கின்றார். மேலும், இவர் ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து கொண்டு இருக்கிறார்.

சமீபத்தில் வெளிவந்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே திரைபடத்தில் யோகி பாபு நடித்திருந்தார். இப்படம் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு என்ற படத்தில் யோகி பாபு நடித்திருக்கிறார். அதேபோல் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் வெளியாகி இருந்த ரிப்பீட் ஷூ படத்தில் யோகி பாபு நடித்து இருந்தார். இந்த படத்தில் திலீபன், ரெடிங் கிங்சிலே, ஜார்ஜ் விஜய், ப்ரியா போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசை அமைத்து இருக்கிறார். டைம் டிராவல் கான்செப்டில் இந்த படம் உருவாகி இருந்தது.

ஷூ படம்:

இந்நிலையில் இந்த படத்தின் வெளியீடு தயாரிப்பாளரை நிர்வாணமாக்கி அடித்து உதைத்து சித்திரவதை செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தனி ஒருவன், மனம் கொத்தி பறவை, டோரா போன்ற பல படங்களில் படத்தொகுளராக பணியாற்றியவர் கோபி கிருஷ்ணா. இவர் சொந்தமாக படம் தயாரித்து கையை சுட்டுக் கொண்டதால் விநியோகஸ்தர் மதுராஜ் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். விநியோகஸ்தர் மதுராஜ் யோகி பாபு நடிப்பில் வெளிவந்த ஷூ படத்தின் ஓடிடி, டிஜிட்டல் மற்றும் வெளிமாநில வெளியீட்டு உரிமையை வாங்கி இருக்கிறார். இதற்காக ஷூ படத்தின் தயாரிப்பாளரான கார்த்திக் என்பவர் உடன் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டு இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=NDzVJWPabMI

தயாரிப்பாளர் கார்த்தி செய்த செயல்:

முன் பணமாக 20 லட்சம் ரூபாயை மதுராஜ் கொடுத்திருக்கிறார். மீதமுள்ள பணத்தை படம் வெளியீட்டின் பிறகு இரண்டு தவணையாக தருவதாக மதுராஜ் கூறியிருக்கிறார். ஆனால், ஷூ படம் படுதோல்வி அடைந்ததால் எவரும் அந்த படத்தை வாங்க முன்வரவில்லை. இதனால் மதுராஜ் ஒப்பந்தப்படி பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்திருக்கிறார். இந்த நிலையில் மதுராஜை தேடி அவருடைய அலுவலகத்திற்கு சில பேருடன் தயாரிப்பாளர் கார்த்திக் சென்று இருக்கிறார். அவர் அலுவலகத்தில் இருந்த கோபி கிருஷ்ணா, ஊழியர் பென்சர் ஆகியோரை பணய கைதி போல கடத்திச் சென்று நிர்வாணமாக்கி சித்திரவதை செய்திருக்கிறார்.

கடத்தல் கும்பலின் தாக்குதல்:

பின் மதுராஜிடம் பணம் கேட்டு மிரட்டி இருப்பதாக கூறப்படுகிறது. மதுராஜ் தன் மனைவியின் பிரசவத்திற்காக மதுரைக்கு வந்து விட்டதாக நழுவி இருக்கிறார். இதனால் கடத்தி சென்ற இருவரிடமிருந்து ஏடிஎம்களை பறித்து அதிலிருந்து சுமார் 70 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு கத்தியால் அவர்கள் இருவரையும் வெட்டி தாம்பரம் பகுதியில் கண்ணை கட்டி இறக்கிவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதில் கோபி கிருஷ்ணா தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். பென்சரை காணவில்லை. அவர் என்ன ஆனார் என்பதும் தெரியவில்லை.

https://www.youtube.com/watch?v=FVthrO0Q_2U

மதுராஜ் அளித்த புகார்:

இதை அடுத்து சம்பவம் தொடர்பாக மதுராஜ் போலீசில் புகார் அளித்திருக்கிறார். விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில் ஷூ படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் தூண்டுதலின் பெயரில் பிரபல ரவுடியின் கூலிப்படை கும்பல் தான் இந்த கடத்தலில் ஈடுபட்டதாக தெரியவந்தது. முதல் கட்டமாக இந்த கூலிப்படையில் தொடர்புடைய வினோத்குமார், நந்தகுமார், பாஸ்கரன், பிரசாத் ஆகியோரை போலீசார் கைது செய்து கடத்தல் கும்பல் பயன்படுத்திய கார், மூன்று செல்போன்களை பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றது. தலைமறைவாக உள்ள மீதமுள்ள ஆறு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

behindtalkies AMP · Quick view
View full