சாப்பிடும் போது தனது ஸ்டைலில் சாமி கும்பிட்ட விஷால் - அருகில் இருந்த யோகி பாபு கொடுத்த செம Reaction.

By Rajkumar · 18/1/2024

மூன்று மதம் வழிபாட்டை மேற்கொண்ட விஷாலை கண்டு யோகி பாபு கொடுத்த Reaction தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகன் ஆவார். விஷால் சினிமாவில் நடிகர் ஆவதற்கு முன்பே நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து இருந்தார். அதன் பின் இவர் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் செல்லமே.

https://twitter.com/muthupalani_/status/1747668988233150695?s=48

அதன் பின் நடிகர் விஷால் அவர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். மேலும், இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர், திரைப்படத் நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார். இந்த ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் அணி தான் மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறது. அதோடு தமிழ் சினிமாவில் புரட்சி தளபதி என்று நடிகர் விஷாலை அழைக்கிறார்கள். இருந்தாலும், விஷால் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

விஷால் நடித்த படம்;

அந்த வகையில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். இப்படத்தை எஸ்.வினோத் குமார் தயாரித்துஇருந்தது. ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, அபிநயா, ரிது வர்மா, நிழல்கள் ரவி, Y.G. மகேந்திரன் உட்பட பலர் நடித்திருந்தனர். மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

https://twitter.com/rinosh_reigns/status/1747617792247857650?s=48

சமீப காலமாக விஷால் எங்கு சென்று சாமி கும்பிட்டாலும், எதை சாப்பிட்டாலும் மூன்று மத கடவுள்களை வணங்கி சாப்பிட்டு வருகிறார். ஆனால், இது சமூக வலைதளத்தில் அடிக்கடி கேலிக்கு உள்ளாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் நேற்று mgr பிறந்தநாளை முன்னிட்டு அனைவருடன் சேர்ந்து உணவு சாப்பிட்ட விஷால் வழக்கம் போல சாப்பிடும் முன் சாமி கும்பிட துவங்கினார். அப்போது அருகில் இருந்த யோகி பாபு கொடுத்த Reaction தான் தற்போது வைரலாகி வருகிறது.

தற்போது விஷால் இயக்குனர் ஹரி இயக்கத்தில் தனது 34 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் சவுத் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றது. மேலும், இந்த படம் வித்தியாசமான போலீஸ் கதை என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே ஹரி- விஷால் கூட்டணியில் தாமிரபரணி, பூஜை படங்கள் வெளியாகி இருந்தது. இந்த இரண்டு படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டும் இல்லாமல் வசூலையும் பெற்று தந்திருந்தது. இதனை அடுத்து மூன்றாவது முறையாக விஷால்- ஹரி கூட்டணி இணைந்து இருக்கிறது. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full