யோகி பாபுவிற்கு கவுண்டமணி செய்துள்ள அட்வைஸ் - அவரே கூறிய தகவல்.

By Rajkumar · 3/10/2020

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தற்போது பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு.

இந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் 20 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கைவசம் வைத்து இருக்கிறாராம் யோகி பாபு.நடிகர் யோகி பாபுவிற்கு திருமணம் எப்போ?எப்போ? என்று பல கேள்விகள் சோசியல் மீடியாவில் வந்து இருந்தது. தற்போது ஒரு வழியாக நடிகர் யோகி பாபு அவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்து முடிந்தது. இவர் வேலூரை சேர்ந்த மஞ்சு பார்கவி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற யோகி பாபு, கௌண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம் குறித்து பேசியுள்ளார். அதில், கவுண்டமணி சார் சொன்ன ஒரு அட்வைஸைத்தான் இப்போவரைக்கும் பாலோ பண்ணிட்டு இருக்கேன். முதல்முறை அவரை மீட் பண்ணும்போது, 'தம்பி யோகி பாபு, நீ எதை நோக்கி ஓடுறியோ அதை நோக்கி ஓடிட்டே இரு. எவனாவது கூப்பிடுறான்னு திரும்பிப் பார்த்தா, உன்னைத் திண்ணையில உட்கார வெச்சுடுவாங்க.

உன் இலக்கு மட்டும்தான் உன் கண்ணுக்குக் தெரியணும்'னு சொன்னார். இப்போ வரைக்கும் அப்பப்போ சார்கிட்ட பேசுவேன். அதே மாதிரி, வடிவேலு அண்ணனும் 'கோலமாவு கோகிலா' படம் பார்த்துட்டு என்னை ஆபீஸுக்கு வரச்சொன்னார். அவர்கிட்ட ரொம்ப நேரம் பேசிட்டிருந்தேன். விவேக் சாரும் `கோலமாவு கோகிலா' படம் பார்த்ததுக்கு அப்புறம் கூப்பிட்டுப் பேசினார். அவரோடு 'பிகில்', 'அரண்மனை - 3' படத்துல நடிச்சிருக்கேன். சந்தானமும் சூரியும் ரொம்ப நெருங்கிய நண்பர்கள் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full